
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஃபரீத் அக்மது மாலிக் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரை எதிர் கொண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 ரன்கள் எடுத்தார். 2ஆவது பந்தை ரோகித் சர்மா எதிர்கொண்டார். இதில், பந்து பேடில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் ரன் எடுக்கவில்லை. இதையடுத்து 5ஆவது பந்தானது பேடில் பட்டு பவுண்டரிக்கு சென்றதாக நடுவர் வீரேந்தர் சர்மா அறிவித்தார்.
பாகிஸ்தானை பந்தாடிய ஃபின் ஆலன் – 3ஆவது போட்டியில் வெற்றி; 3-0 என்று தொடரை வென்ற நியூசிலாந்து!
ஆனால், டிவி ரீப்ளேயில் பந்தானது பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது தெளிவாக தெரிந்தது. அதன் பிறகு ரோகித் சர்மா, அரே விரூ பந்து பேட்டில் பட்டு சென்றதை பாக்கலயா என்று கேள்வி எழுப்பியது ஸ்டெம்ப் மைக்கில் தெளிவாக கேட்டுள்ளது. எனினும் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் அதற்கு ரோகித் சர்மாவிற்கு பவுண்டரி கொடுக்கப்படும் என்று கூறினார்கள். ஆனால், கடைசி வரை கொடுக்கவில்லை. எனினும், அடுத்த ஓவரில் ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்து ரன் கணக்கை தொடங்கினார். இதற்கு அடுத்த ஓவரில் பவுண்டரி அடித்தார்.
எஸ்ஏ20 லீக் தொடர் – சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி, துள்ளிக் குதித்து கொண்டாடிய காவ்யா மாறன்!