சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு – தோற்றாலும், ஜெயிச்சாலும் கவலையில்லை – டீம் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்!

By Rsiva kumarFirst Published Jan 17, 2024, 7:07 PM IST
Highlights

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் 2 டி20 போட்டிகளிலும் தலா 6, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது பெங்களூருவில் நடக்கிறது.

பாகிஸ்தானை பந்தாடிய ஃபின் ஆலன் – 3ஆவது போட்டியில் வெற்றி; 3-0 என்று தொடரை வென்ற நியூசிலாந்து!

Latest Videos

இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்துள்ளார். முதல் 2 போட்டிகளில் பவுலிங் செய்ததால், இன்றைய போட்டியில் பேட்டிங் செய்கிறோம். விக்கெட்டிற்கு எந்த சம்பந்தமும் இல்லை. சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களது காம்பினேஷனை பரிசோதனை செய்ய முயற்சிக்கிறோம். இந்திய அணியைப் பொறுத்த வரையில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சஞ்சு சாம்சன், ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும், ஜித்தேஷ் சர்மா, அக்‌ஷர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வெளியேறியுள்ளனர் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

எஸ்ஏ20 லீக் தொடர் – சன்ரைசர்ஸ் த்ரில் வெற்றி, துள்ளிக் குதித்து கொண்டாடிய காவ்யா மாறன்!

இதே போன்று ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் ஜத்ரன் தங்களது அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்றார். அதன்படி, நூர் அகமது, ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக் மற்றும் முஜீப் உர் ரஹ்மா ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ஷராஃபுதின் அஷ்ரஃப், கைஸ் அகமது, முகமது சலீம் சஃபீ, ஃபரீத் அக்மது மாலிக் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய், முகேஷ் குமார், ஆவேஷ் கான்.

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் ஜத்ரன் (கேப்டன்), குல்ப்தீன் நைப், அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரன், கரீம் ஜனத், ஷராஃபுதின் அஷ்ரஃப், கைஸ் அகமது, முகமது சலீம் சஃபீ, ஃபரீத் அக்மது மாலிக்.

முதலில் ஜிம் ஒர்க் அவுட், இப்போ யோகா பயிற்சி - வைரலாகும் ஹர்திக் பாண்டியா புகைப்படம்!

click me!