தோனியும் ரோஹித்தும் இல்லைனா தோல்வி உறுதி!! எப்படினு பாருங்க.. நம்ம கேப்டனுக்கு அந்தளவுக்குலாம் யோசிக்க தெரியாது

By karthikeyan VFirst Published Mar 6, 2019, 4:27 PM IST
Highlights

கடைசி 5 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. மிகவும் எளிதாக அடித்துவிடக்கூடிய இலக்குதான். இன்னும் 5 ஓவர்கள் இருக்கும் நிலையில், பும்ரா மற்றும் ஷமி ஆகிய இருவருக்கும் சேர்த்து 4 ஓவர்கள் மட்டுமே மீதம் இருந்தது. எனவே எஞ்சிய ஒரு ஓவரை விஜய் சங்கரோ கேதர் ஜாதவோ வீச வேண்டிய கட்டாயம் இருந்தது.

விராட் கோலி மிகச்சிறந்த வீரராக இருந்தாலும் அவரது கேப்டன்சியில் சில குறைபாடுகள் உள்ளன. பவுலிங் சுழற்சி, வீரர்களை பயன்படுத்தும் விதம், கள வியூகம் ஆகியவை குறித்த விமர்சனங்கள் உண்டு. ஆனால் சமீபத்தில் அவரது கேப்டன்சி மேம்பட்டிருப்பதாக தெரிந்தது. ஆனால் அவர் இன்னும் ஒரு கேப்டனாக முதிர்ச்சியடையவில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். கேப்டன்சியை பொறுத்தமட்டில் கோலியைவிட ரோஹித் சர்மா சிறப்பாகவே செயல்படுகிறார். 

விராட் கோலி இல்லாத நேரங்களில் ரோஹித் சர்மா அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த பணியை செய்தும் வருகிறார். வீரர்களை கையாளும் விதம், கள வியூகம் ஆகியவற்றில் ரோஹித் சர்மா சிறப்பாகவே செயல்படுகிறார். அதுமட்டுமல்லாமல், நெருக்கடியான சூழல்களிலும் அந்த அழுத்தத்தை வீரர்கள் மீது திணிக்காமல் நிதானமாக கையாள்கிறார். 

இப்போதும் கூட கோலி கேப்டனாக இருந்தாலும் ரோஹித் மற்றும் தோனியின் சிறந்த ஆலோசனைகள் தான் பலனளிக்கின்றன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய பவுலர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். நன்றாக பந்துவீசிக்கொண்டிருந்த குல்தீப் யாதவ், 43வது ஓவரில் 15 ரன்களை வாரி வழங்கினார். அப்போது போட்டி இந்திய அணியிடமிருந்து விலகி செல்லும் வகையில் இருந்தாலும், 45வது ஓவரில் அலெக்ஸ் கேரியை வீழ்த்தி மீண்டும் பிரேக் கொடுத்தார் குல்தீப்.

இதையடுத்து கடைசி 5 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. மிகவும் எளிதாக அடித்துவிடக்கூடிய இலக்குதான். இன்னும் 5 ஓவர்கள் இருக்கும் நிலையில், பும்ரா மற்றும் ஷமி ஆகிய இருவருக்கும் சேர்த்து 4 ஓவர்கள் மட்டுமே மீதம் இருந்தது. எனவே எஞ்சிய ஒரு ஓவரை விஜய் சங்கரோ கேதர் ஜாதவோ வீச வேண்டிய கட்டாயம் இருந்தது. 30 பந்துகளுக்கு 29 ரன்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், முடிந்தவரை பும்ரா மற்றும் ஷமிக்கு முன்னுரிமை கொடுத்து வீசவைத்து விக்கெட்டுகளை வீழ்த்த முனைவதுதான் நல்லது. அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இன்னும் 4 ஓவர்களை பும்ராவையும் ஷமியையும் வீசவைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற முனைய வேண்டும். விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டால் வெற்றி நமது. அப்படி இல்லாவிட்டாலும் கூட ரன்களை கட்டுப்படுத்துவிடுவார்கள். அப்படி ரன்களை கட்டுப்படுத்தினால், கடைசி ஓவரில் வெற்றியை பறிக்க முனைய வேண்டும். ஆகமொத்தத்தில் போட்டியை கடைசி ஓவர் வரை எடுத்துச்செல்ல வேண்டுமென்றால் 46 முதல் 49வது ஓவர் வரை பும்ரா மற்றும் ஷமியை தலா 2 ஓவர்களை வீசவைப்பதுதான் நல்லது. 

ஆனால் 46வது ஓவரை விஜய் சங்கரையோ கேதர் ஜாதவையோ வீசவைக்கலாம் என்று கேப்டன் கோலி திட்டமிட்டிருக்கிறார். அப்படி செய்தால், அந்த ஓவரிலேயே போட்டி இந்திய அணியின் கையிலிருந்து பறிபோவது உறுதியாகிவிடும். அதனால் 46 முதல் 49வரை ஷமியையும் பும்ராவையும் வீசவைப்போம் என்று ரோஹித்தும் தோனியும் கோலியிடம் ஆலோசனை தெரிவித்துள்ளனர். அவர்களின் ஆலோசனையின்படிதான் 46வது ஓவரை பும்ரா வீசியுள்ளார். அதுதான் சரியான முடிவு. 46வது ஓவரை விஜய் சங்கரையோ கேதரையோ வீசவைக்கலாம் என நினைத்த கோலியின் திட்டம் தவறானது. ரோஹித் மற்றும் தோனியின் ஆலோசனையின்படி பும்ராவை 46வது ஓவரை வீசவைத்ததன் விளைவாக இரண்டு விக்கெட்டுகள் கிடைத்தன. 46வது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுத்தார் பும்ரா.

தோனி மற்றும் ரோஹித்தின் ஆலோசனையின்படிதான் 46வது ஓவரை பும்ராவை வீசவைத்ததாக கேப்டன் கோலி போட்டிக்கு பிறகு தெரிவித்தார். மிகச்சிறந்த வீரராக இருந்தும்கூட போட்டியின் போக்கிற்கு ஏற்றவாறு கோலியால் சரியான முடிவை எடுக்க முடியவில்லை. ரோஹித்தும் தோனியும் தான் அவருக்கு பக்கபலமாக இருக்கின்றனர். 
 

click me!