ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ராகுல் திரிபாதி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய இருவருக்கும் கண்டிப்பாக ஆட வாய்ப்பளிக்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய மெயின் அணி ஆசிய கோப்பைக்கு தயாராகிவரும் நிலையில், கேஎல் ராகுல் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே தொடரில் ஆடிவருகிறது.
3 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என வென்றுவிட்டது.
இதையும் படிங்க - சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த தீபக் ஹூடா..! எந்த இந்திய வீரருக்கும் கிடைத்திராத பெருமை
கடைசி ஒருநாள் போட்டி நாளை ஹராரேவில் நடக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது இந்திய அணி. ஆறுதல் வெற்றியாவது பெறும் முனைப்பில் உள்ளது ஜிம்பாப்வே அணி.
முதல் 2 போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, ஆவேஷ் கான் ஆகிய வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. முதல் 2 போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு கடைசி போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாதி ஆகிய இருவருக்கும் கண்டிப்பாக ஆட வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்ல்லை என்றால் அது அநியாயம் என்று ராபின் உத்தப்பா கருத்து கூறியுள்ளார்.
இதையும் படிங்க - ஷாஹீன் அஃப்ரிடி காயம் அடையல; அடைய வச்சுட்டீங்க..! பாக்., முன்னாள் வீரர் விளாசல்
இதுகுறித்து பேசியுள்ள ராபின் உத்தப்பா, பேட்டிங்கை பொறுத்தமட்டில் நிறைய மாற்றம் செய்யப்படாது. ஷபாஸ் அகமதுவுக்கு ஆட வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராகுல் திரிபாதி ஆகிய இருவரும் தங்களுக்கான வாய்ப்புக்காக தொடர்ந்து காத்துக்கொண்டிருக்கின்றனர். எனவே அவர்கள் இருவருக்கும் கடைசி போட்டியில் கண்டிப்பாக வாய்ப்பளிக்க வேண்டும். இளம் வீரர்கள் அபாரமாக ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
கடைசி போட்டியில் தீபக் சாஹரும் ஆடுவார் என நினைக்கிறேன். தீபக் சாஹர் ஆடினாலும் ஷர்துல் தாகூரும் ஆடுவார். பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவருக்கும் ஓய்வளிக்கப்படும் என நினைக்கிறேன் என்று உத்தப்பா கூறியிருக்கிறார்.