ஷாஹீன் அஃப்ரிடி காயம் அடையல; அடைய வச்சுட்டீங்க..! பாக்., முன்னாள் வீரர் விளாசல்

By karthikeyan V  |  First Published Aug 21, 2022, 5:21 PM IST

ஷாஹீன் அஃப்ரிடி அதிக பணிச்சுமை காரணமாகத்தான் காயமடைந்ததாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத் சாடியுள்ளார்.
 


பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி. 22 வயதே ஆன ஷாஹீன் அஃப்ரிடி, பாகிஸ்தான் அணியின் முன்னணி மற்றும் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலராக வளர்ந்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக 25 டெஸ்ட், 32 ஒருநாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் ஆடி முறையே 99, 62 மற்றும் 47 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க - சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த தீபக் ஹூடா..! எந்த இந்திய வீரருக்கும் கிடைத்திராத பெருமை

பாகிஸ்தான் அணிக்காக 3 விதமான போட்டிகளிலும் ஆடிவரும் ஷாஹீன் அஃப்ரிடி காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் அவர் ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் டாப் ஆர்டர் மற்றும் முக்கியமான பேட்ஸ்மேன்களான ரோஹித், ராகுல், கோலி ஆகியோரை விரைவில் வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலைய வைத்தவர் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர் ஷாஹீன் அஃப்ரிடி. அவர் தான் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

இந்த ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஷாஹீன் அஃப்ரிடி ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி.. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கருத்து

இந்நிலையில், ஷாஹீன் அஃப்ரிடி காயம் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஆகிப் ஜாவேத், ஓய்வே இல்லாமல் தொடர்ந்து கிரிக்கெட் ஆடியதுதான் ஷாஹீன் அஃப்ரிடியின் காயத்திற்கு காரணம். ஆசிய கோப்பையில் ஷாஹீன் அஃப்ரிடி ஆடாதது பாகிஸ்தான் அணிக்கு பெரிய இழப்பு. அவர் இல்லாததன் விளைவை பாகிஸ்தான் அணி அனுபவிக்கும். அணி நிர்வாகம் இந்த சூழலை நிதானமாக எதிர்கொள்ள வேண்டும். அவர் முழுமையாக காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸை அடையும் வரை பொறுமை காக்கவேண்டும். அப்போதுதான், ஷாஹீன் அஃப்ரிடி நீண்டகாலம் ஆடமுடியும் என்று ஆகிப் ஜாவேத் கூறியுள்ளார்.

இந்திய அணியில் சீனியர் மற்றும் நட்சத்திர வீரர்களுக்கு போதுமான ஓய்வளிக்கும் வகையில், மாற்று வீரர்களும், பென்ச் வலிமையும் சிறப்பாக உள்ளது. பாகிஸ்தானுக்கு அதுதான் பிரச்னையாக இருக்கிறது என்பதை பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி கொண்டே இருக்கின்றனர். இளம் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில்வாய்ப்பளித்து வளர்த்துவிட பாகிஸ்தான் தயங்குவதால் தான் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் ஆட வேண்டியிருக்கிறது. அதனால் பேட்ஸ்மேன்களுக்கு பாதிப்பில்லை என்றாலும், ஷாஹீன் அஃப்ரிடி மாதிரியான ஃபாஸ்ட் பவுலர்கள் காயமடையத்தான் நேரிடும்.
 

click me!