நெதர்லாந்து சூப்பர் பவுலிங்.. சதத்தை தவறவிட்ட பாபர் அசாம்.. எளிய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்

Published : Aug 21, 2022, 06:11 PM IST
நெதர்லாந்து சூப்பர் பவுலிங்.. சதத்தை தவறவிட்ட பாபர் அசாம்.. எளிய இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்

சுருக்கம்

நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 206 ரன்கள் அடித்த பாகிஸ்தான் அணி, 207 ரன்கள் என்ற எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது.  

பாகிஸ்தான் அணி நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி போட்டி இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையும் படிங்க - ZIM vs IND: ஆடாத வீரர்களுக்கு கடைசி ODI-யில் வாய்ப்பு! இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்.. உத்தேச ஆடும் லெவன்

பாகிஸ்தான் அணி:

ஃபகர் ஜமான், அப்துல்லா ஷாஃபிக், பாபர் அசாம் (கேப்டன்), அகா சல்மான், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஷாநவாஸ் தஹானி, ஜாகித் மஹ்மூத்.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாமை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் (2) மற்றும் ஃபகர் ஜமான்(26) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். 3ம் வரிசையில் இறங்கிய பாபர் அசாம் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் அகா சல்மான்(24), குஷ்தில் ஷா(2), முகமது ஹாரிஸ்(4) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதையும் படிங்க - சர்வதேச கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த தீபக் ஹூடா..! எந்த இந்திய வீரருக்கும் கிடைத்திராத பெருமை

ஒருமுனையில் நிலைத்து ஆடிய கேப்டன் பாபர் அசாம் 91 ரன்களை குவித்தார். 9 ரன்னில் சதத்தை தவறவிட்டு 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் பாபர் அசாம். பின்வரிசையில் முகமது நவாஸ் 27 ரன்கள் அடித்தார். இதையடுத்து 49.4 ஓவரில் 206 ரன்களுக்கு ஆல் அவுட்டான பாகிஸ்தான் அணி, 207ரன்கள் என்ற எளிய இலக்கை நெதர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.

அபாரமாக பந்துவீசிய நெதர்லாந்து பவுலர்கள், வலுவான அதிரடி பேட்டிங் ஆர்டரை கொண்ட பாகிஸ்தான் அணியை 206  ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA T20: ஆல்ரவுண்டர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. மாற்று வீரர் இவரா? ரசிகர்கள் ஷாக்!
பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி பந்து வீச தடை.. பாதியில் பந்தை புடுங்கிய நடுவர்.. என்ன நடந்தது?