ராபின் உத்தப்பா கேப்டன்.. சஞ்சு சாம்சன் துணை கேப்டன்

By karthikeyan VFirst Published Sep 22, 2019, 5:02 PM IST
Highlights

கேரள அணியின் கேப்டனாக கர்நாடகாவை சேர்ந்த சீனியர் வீரரான ராபின் உத்தப்பாவும், துணை கேப்டனாக சஞ்சு சாம்சனும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் வரும் 24ம் தேதி(நாளை மறுநாள்) தொடங்குகிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 25ம் தேதி வரை நடக்கவுள்ளது. 

உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரேவில், தமிழ்நாடு, மும்பை, டெல்லி, கர்நாடகா, ஹைதராபாத், ஆந்திரா, குஜராத், சவுராஷ்டிரா, பெங்கால், அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், திரிபுரா, ஜம்மு காஷ்மீர், பரோடா, ஒடிசா, ராஜஸ்தான், சிக்கிம், மேகாலயா, விதர்பா ஆகிய அணிகள் கலந்துகொண்டு ஆடுகின்றன.

இந்த தொடருக்கான மும்பை அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரும் பஞ்சாப் அணியின் கேப்டனாக மந்தீப் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டு அணியை தினேஷ் கார்த்திக் வழிநடத்தி செல்லவுள்ளார். 

இந்நிலையில், கேரள அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அணிக்கு, கர்நாடகாவை சேர்ந்த வீரரும் இந்திய அணியில் ஏற்கனவே ஆடியிருப்பவருமான ராபின் உத்தப்பா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் விரைவில் இடம்பிடிக்கவுள்ள சஞ்சு சாம்சன், துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த விஜய் ஹசாரே சீசனில் கேரள அணியில் இடம்பெற்றிருந்த சச்சின் பேபியும் கேரள அணியில் உள்ளார். 

விஜய் ஹசாரே தொடருக்கான கேரள அணி:

ராபின் உத்தப்பா(கேப்டன்), சஞ்சு சாம்சன்(துணை கேப்டன்), ஜலஜ் சக்சேனா, சச்சின் பேபி, ராகுல் பி, முகமது அசாருதீன்(விக்கெட் கீப்பர்), ஆசிஃப் கேஎம், விஷ்ணு வினோத், நிதீஷ் எம்டி, பாசில் தம்பி, சந்தீப் வாரியர், மிதுன் எஸ், அக்‌ஷய் சந்திரன், சல்மான் நிஸார், சிஜோமன் ஜோசப். 

click me!