ஓய்வு தேவை என்பதால், ஐபிஎல்லில் ரிஷப் பண்ட் பங்கேற்பதில் சிக்கல்?

Published : Jan 02, 2023, 11:54 AM IST
ஓய்வு தேவை என்பதால், ஐபிஎல்லில் ரிஷப் பண்ட் பங்கேற்பதில் சிக்கல்?

சுருக்கம்

கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் இந்த ஆண்டில் நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டெல்லி - டேராடூன் சாலையில் காரில் சென்ற போது சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கார் வேகமாக தடுப்பில் மோதி பலமுறை சுழன்று விழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் தீப்பிடிப்பதற்கு முன்பாக ரிஷப் பண்ட் கார் ஜன்னலை உடைத்து அக்கம் பக்கத்தாரின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

2ஆவது டெஸ்ட்: அதிரடி மாற்றத்தோடு களமிறங்கும் பாகிஸ்தான் - டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்!

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. முகத்தில் காயங்கள் அதிகமிருந்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. காரை வேகமாக ஓட்டிச்சென்றபோது லேசாக கண் அசந்து விட்டதாகவும், அதனால் தான் கார் விபத்துக்குள்ளானதாகவும் ரிஷப் பண்ட் தெரிவித்திருந்தார். ரிஷப் பண்ட்டின் மூளை மற்றும் முதுகுத்தண்டு பகுதிகள் முழுமையாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்கேன் ரிப்போர்ட்டில் மூளை மற்றும் முதுகுத்தண்டு ஆகிய 2 முக்கியமான பாகங்களிலும் எந்த பிரசனையும் இல்லை என்று தெரியவந்தது. 

காதலியுடன் புத்தாண்டை கொண்டாடிய கே எல் ராகுல்: வைரலாகும் புகைப்படம்!

இந்த நிலையில், கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்டுக்கு அதிக நாட்கள் ஓய்வு தேவைப்படும் என்பதால், இந்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் அணியில் இடம் பெறாதது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஏற்கனவே இலங்கை அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ரிஷப் பண்ட் இடம் பெறவில்லை. இதைத் தொடர்ந்து இந்தியா வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரிலும் அவர் இடம் பெற மாட்டார் என்று தெரிகிறது.

மாலத்தீவில் மனைவி, மகளுடன் ரோகித் சர்மா: வைரலாகும் புகைப்படம்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!