2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் – சவுரவ் கங்குலி உறுதி!

Published : Nov 10, 2023, 03:08 PM IST
2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் – சவுரவ் கங்குலி உறுதி!

சுருக்கம்

கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட் தற்போது குணமடைந்த நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் அதன் பிறகு நடந்த எந்த தொடரிலும் இடம் பெறவில்லை. ஐபிஎல் தொடரிலும் பங்கேற்கவில்லை. அதன் பிறகு தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து கடுமையான உடற்பயிற்சி மேகொண்டு வந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், கொல்கத்தாவில் நடந்த டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் ரிஷப் பண்ட் கலந்து கொண்டார். வரும் டிசம்பர் மாதம் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் ஏலம் நடக்க இருக்கிறது. இதையடுத்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்க இருக்கிறது.

South Africa vs Afghanistan: அரையிறுதிக்கான கடைசி வாய்ப்பு: டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்!

இதில், ரிஷப் பண்ட் பங்கேற்பார் என்று டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநரான சவுரவ் கங்குலி கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தற்போது நன்றாக குணமடைந்துள்ள ரிஷப் பண்ட் அடுத்த சீசனில் விளையாடுவார். இப்போது பயிற்சி செய்யாத நிலையில், வரும் டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் ஏலம் குறித்து விவாதித்தோம் என்று அவர் கூறியுள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் இடம் பெறாத நிலையில், அவருக்குப் பதிலாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரி கண்ணு – எல்லாம் தொலையட்டும் – ரவீந்திராவிற்கு திருஷ்டி சுத்திய பாட்டி!

ரிஷப் பண்ட் காயம்:

டிசம்பர் 2022: டிசம்பர் 30, 2022 அன்று ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார்.

ஜனவரி 2023: கோகிலாபென் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக பண்ட் விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பிப்ரவரி 2023: மும்பையில் டாக்டர் தின்ஷா பர்திவாலாவின் கீழ் முழங்கால் தசைநார் புனரமைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

பிப்ரவரி 2023: ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட 45 நாட்கள் மருத்துவமனையில் இருந்த பிறகு வீடு திரும்பினார்.

ஏப்ரல் 2023: டெல்லியில் நடந்த DC vs GT ஐபிஎல் போட்டியை நேரில் சென்று பார்த்தார்.

ஏப்ரல் 2023: விபத்துக்குப் பிறகு முதல் முறையாக, பண்ட் தேசிய கிரிக்கெட் அகாடமியில் யாருடைய ஆதரவில்லாமல் நடக்கத் தொடங்கினார்.

ஜூன் 2023: டீம் இந்தியா வீரர்களுடன் பண்ட் ஜிம்மில் பயிற்சியைத் தொடங்கினார்.

ஆகஸ்ட் 2023: ரிஷப் பண்ட் தொடர்ந்து குணமடைந்தார், ஆனால் மக்கள் பார்வையில் முதல் முறையாக பேட் செய்தார்.

செப்டம்பர்: தொடர்ந்து குணமடைந்து வரும் நிலையில் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை இரண்டையும் தவறவிட்டார்.

அக்டோபர் 2023: குணமடைந்தது குறித்த கூடுதல் நேர்மறையான செய்திகள், ஆனால் சையத் முஷ்டாக் அலி டிராபியில் விளையாட இன்னும் தகுதி இல்லை.

நவம்பர் 2023: கொல்கத்தாவில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் முகாமில், மீட்பு தொடர்கிறது.

சச்சின் டெண்டுல்கரின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்த நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!
இஷான் கிஷன் ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. முதல் SMAT பட்டத்தை வென்று ஜார்க்கண்ட் சாதனை..!