இந்த தடவை மிஸ் ஆயிடுச்சு.. அடுத்த மேட்ச்ல பாருங்க!! சிஎஸ்கேவிற்கு பயம் காட்டும் ரிஷப் பண்ட்

By karthikeyan VFirst Published May 9, 2019, 12:30 PM IST
Highlights

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்தது. 163 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷாவின் அதிரடியான தொடக்கம் மற்றும் ரிஷப் பண்ட்டின் அதிரடியான ஃபினிஷிங்கால் கடைசி ஓவரின் 5வது பந்தில் இலக்கை எட்டி டெல்லி அணி வெற்றி பெற்றது. 
 

ஐபிஎல் 12வது சீசனின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. 

சிஎஸ்கேவிற்கு எலிமினேட்டர் போட்டியில் நேற்று சன்ரைசர்ஸை வீழ்த்தி வென்ற டெல்லி அணிக்கும் இடையே இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நாளை நடக்கிறது. எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணியும் சன்ரைசர்ஸும் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்தது. 163 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷாவின் அதிரடியான தொடக்கம் மற்றும் ரிஷப் பண்ட்டின் அதிரடியான ஃபினிஷிங்கால் கடைசி ஓவரின் 5வது பந்தில் இலக்கை எட்டி டெல்லி அணி வெற்றி பெற்றது. 

17 ஓவர் முடிவில் டெல்லி அணி 129 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. தம்பி வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை விளாசினார் ரிஷப் பண்ட். அந்த ஓவரில் மட்டும் 26 ரன்களை குவித்தார். இதையடுத்து கடைசி 2 ஓவர்களில் 12 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் ரிஷப் பண்ட்டை புவனேஷ்வர் குமார் அவுட்டாக்கிவிட்டார். 

அதனால் ரிஷப் பண்ட்டால் களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்க முடியவில்லை. கடைசி ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்திருந்தாலும் கூட, கடைசி ஓவரில் இலக்கை எட்டி டெல்லி வென்றது. ஆனால் ரிஷப் பண்ட் அவுட்டானதும் அந்த அணியை பதற்றம் தொற்றிக்கொண்டது. ஆனாலும் டெல்லி அணி வென்றது. 21 பந்துகலில் 49 ரன்களை குவித்தார் ரிஷப் பண்ட்.

இதையடுத்து போட்டிக்கு பின்னர் பேசிய ரிஷப் பண்ட், களத்தில் நிலைத்துவிட்டால் கடைசி வரை நின்று போட்டியை ஜெயித்துக்கொடுக்க வேண்டும். இந்த முறை கடைசிவரை நின்று வெற்றிகரமாக முடிக்கவில்லை. அடுத்த முறை கடைசிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்ய முயற்சிப்பேன் என்று ரிஷப் பண்ட் தெரிவித்தார். 

நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் மிகுந்த அனுபவம் வாய்ந்த மற்றும் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியான சிஎஸ்கேவை எதிர்கொள்கிறது டெல்லி கேபிடள்ஸ். அந்த போட்டியில் வெல்லும் அணி, இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ளும். 
 

click me!