அப்படிலாம் விட்டுக்கொடுக்க முடியாது.. அழுகுற புள்ளதான் பால் குடிக்கும்.. ரிஷப்பை பார்த்து கத்துக்கோங்க கேப்டன்

By karthikeyan VFirst Published May 9, 2019, 11:47 AM IST
Highlights

கடைசி ஓவரின் நான்காவது பந்தில் நபி ஆட்டமிழக்க, ரஷீத் கான் களத்திற்கு வந்தார். ஐந்தாவது பந்தை தீபக் ஹூடா எதிர்கொண்டார்.

ஐபிஎல் 12வது சீசனின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. 

சிஎஸ்கேவிற்கு எலிமினேட்டர் போட்டியில் நேற்று சன்ரைசர்ஸை வீழ்த்தி வென்ற டெல்லி அணிக்கும் இடையே இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நாளை நடக்கிறது. எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணியும் சன்ரைசர்ஸும் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணிக்கு மார்டின் கப்டில் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். ஆனால் முதல் 2 விக்கெட்டுகளுக்கு பிறகு சன்ரைசர்ஸ் அணியின் ஆட்டம் மந்தமானது. மிடில் ஓவர்களில் வில்லியம்சனும் மனீஷ் பாண்டேவும் படுமந்தமாக ஆடினர். 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. பின்னர் டெத் ஓவர்களில் விஜய் சங்கரும் முகமது நபியும் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 20 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் 162 ரன்கள் எடுத்தது. 

163 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். தவான், ஷ்ரேயாஸ், முன்ரோ ஆகியோர் ஏமாற்ற, பொறுப்புடன் ஆடிய ரிஷப் பண்ட் டெல்லி அணியை வெற்றி பெற செய்தார். தம்பி வீசிய 18வது ஓவரில் 26 ரன்களை குவித்து அந்த ஓவரில் வெற்றியை உறுதி செய்துவிட்டு, 19வது ஓவரில் ரிஷப் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் டெல்லி அணி வென்றது. இதையடுத்து நாளை இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவுடன் மோதுகிறது டெல்லி அணி. 

இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங்கின்போது கடைசி ஓவரில் ஒரு விக்கெட் சர்ச்சையானது. கடைசி ஓவரின் நான்காவது பந்தில் நபி ஆட்டமிழக்க, ரஷீத் கான் களத்திற்கு வந்தார். ஐந்தாவது பந்தை தீபக் ஹூடா எதிர்கொண்டார். அந்த பந்தை கீமோ பால் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்பில் வைடாக வீசினார். அந்த பந்தை ஹூடா அடிக்கவில்லை; ஆனாலும் அதற்கு ஒரு ரன் அழைத்தார் ரஷீத் கான். ரஷீத் கான் மறுமுனையில் இருந்து ஓடியதால் விரைவாக ஓடினார். ஆனால் ரஷீத்தின் அழைப்புக்கு லேட்டாக ரியாக்ட் செய்த ஹூடா, தாமதமாகத்தான் ஓட தொடங்கினார். அதனால் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நேரடியாக பவுலிங் முனைக்கு த்ரோ அடித்தார். 

அப்போது அந்த பந்தை பிடிக்க பவுலர் கீமோ பால் முயலும்போது ரன் ஓடிவந்த ஹூடாவும் பாலும் மோதிக்கொண்டனர். ரிஷப் பண்ட் விட்ட த்ரோ நேரடியாக ஸ்டம்பில் அடித்தது. ஆனால் பேட்ஸ்மேன் மீது பவுலர் மோதியதை டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரிடம் சுட்டிக்காட்டி அவுட் கொடுக்க மறுத்தார். அதனால் ஆட்டத்தின் ஸ்பிரிட் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் ஒப்புக்கொண்டார். ஆனால் ரிஷப் பண்ட் விடவில்லை. பவுலர் மீது எந்த தவறும் இல்லை; அவர் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு பேட்ஸ்மேன் மீது மோதவில்லை. பேட்ஸ்மேன் தான் பவுலருக்கு நேராக ஓடாமல் ஓடியிருக்க வேண்டும். எனவே வேண்டுமென்றே செய்யவில்லை என்பதால் அது அவுட்டுதான் என வாதிட்டார்.

பவுலர் மீது மோதாமல் இருந்திருந்தாலும் கூட ஹூடாவால் கிரீஸை தொட்டிருக்க முடியாது. ஏனெனில் அவரைவிட வேகமாக பந்து சென்றது. எனவே அவர் பவுலர் மீது மோதவில்லை என்றாலும் கூட அவுட்தான் ஆகியிருப்பார். ரிஷப் பண்ட் வாதிட்டதை அடுத்து அவுட் கொடுக்கப்பட்டது. 

ஆட்டத்தின் ஸ்பிரிட் பாதிக்கும்படி நடந்துகொள்ளக்கூடாது. ஒரு கேப்டனாக ஜெண்டில்மேனாக நடந்துகொள்வது நல்லதுதான். அதேநேரத்தில் நம் பக்கம் தவறு இல்லை எனும்பட்சத்தில், விட்டுக்கொடுக்கக்கூடாது. நமக்கான நியாயத்தை பேசி பெறுவதுதான் சரி. அதைத்தான் ரிஷப் செய்தார். ஜெண்டில்மேனாக இருப்பது நல்லது; ஆனால் ஏமாளியாக இருந்துவிடக்கூடாது ஷ்ரேயாஸ். 
 

click me!