சர்வ சாதாரணமாக சிக்ஸர் விளாசுவது எப்படி..? ரகசியத்தை உடைத்த ரிஷப் பண்ட்

By karthikeyan VFirst Published May 9, 2019, 2:02 PM IST
Highlights

டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷாவும் ரிஷப் பண்ட்டும்தான் சிறப்பாக ஆடினர். பிரித்வி ஷா அதிரடியாக தொடங்கிவைக்க, ரிஷப் பண்ட் வெற்றிகரமாக முடித்துவைக்க உதவினார்.

ஐபிஎல் 12வது சீசனின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது. 

சிஎஸ்கேவிற்கு எலிமினேட்டர் போட்டியில் நேற்று சன்ரைசர்ஸை வீழ்த்தி வென்ற டெல்லி அணிக்கும் இடையே இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி நாளை நடக்கிறது. எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணியும் சன்ரைசர்ஸும் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 162 ரன்கள் எடுத்தது. 163 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷாவின் அதிரடியான தொடக்கம் மற்றும் ரிஷப் பண்ட்டின் அதிரடியான ஃபினிஷிங்கால் கடைசி ஓவரின் 5வது பந்தில் இலக்கை எட்டி டெல்லி அணி வெற்றி பெற்றது. 

டெல்லி அணியின் சார்பில் பிரித்வி ஷாவும் ரிஷப் பண்ட்டும்தான் சிறப்பாக ஆடினர். பிரித்வி ஷா அதிரடியாக தொடங்கிவைக்க, ரிஷப் பண்ட் அதிரடியாக முடித்துவைத்தார். 21 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 49 ரன்களை குவித்தார். இந்த சீசனில் மும்பைக்கு எதிரான போட்டிக்கு அடுத்தபடியாக இந்த போட்டியில் அதிரடியாக ஆடி மிரட்டினார். 

ரிஷப் பண்ட் அசால்ட்டாக பெரிய ஷாட்டுகளை அடிக்கக்கூடியவர். நேற்றைய போட்டியிலும் 5 சிக்ஸர்களை அடித்தார். அவர் அதிரடியாக ஆட தொடங்கிவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது கடினம். சன்ரைசர்ஸை அணியை வெளுத்துவாங்கி வெற்றியை பறித்துவிட்டார். 

போட்டிக்கு பின்னர் பேசிய ரிஷப் பண்ட், தனது அதிரடி பேட்டிங் குறித்து பேசிய ரிஷப் பண்ட், டி20 போட்டியில் ஒரு சிறந்த ஓவர் அமைந்தால் போதும். எனவே நான் நேர்மறையான சிந்தனையுடன் ஆடினேன். பேட்டிங் ஆடும்போது நான் பவுலரை பார்ப்பதில்லை; பந்தைத்தான் பார்ப்பேன். மேலும் நான் கஷ்டப்பட்டு ஷாட் அடிக்க முயலவில்லை; ஷாட் ஆடும்போது டைமிங்கில் கவனம் செலுத்தினேன் என்று ரிஷப் பண்ட் தெரிவித்தார். 
 

click me!