#ENGvsIND ஏன் இந்த அவசரம் ரிஷப்..? டீம் இருக்குற நிலைமையில் இதெல்லாம் தேவையா..? தனி ஒருவனாக போராடும் ரோஹித்

By karthikeyan VFirst Published Aug 25, 2021, 6:57 PM IST
Highlights

இந்திய வீரர்கள் அனைவருமே ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்துகளை விரட்டிச்சென்று ஆட முயன்று, அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறுகின்றனர். ரிஷப் பண்ட்டும் 2 ரன்னுக்கு வெளியேறியதால், இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது.
 

இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல், முதல் ஓவரிலேயே ஆண்டர்சனின் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். முதல் 2 போட்டிகளில் நன்றாக பேட்டிங் ஆடிய ராகுல், இந்த போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து களத்திற்கு வந்த புஜாராவும் ஆண்டர்சனின் பந்தில் வெறும் ஒரு ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினார். 4 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துவிட்ட நிலையில், 3வது விக்கெட்டுக்கு ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த கோலி நன்றாக ஆரம்பித்தார். ஆனாலும் அவரை களத்தில் நிலைக்க அனுமதிக்காமல் தனது முதல் ஸ்பெல்லிலேயே கோலியின்(7) விக்கெட்டையும் வீழ்த்தி மிரட்டினார் ஆண்டர்சன்.

இதையடுத்து ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த ரஹானே, அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒரு மணி நேரம் நன்றாக ஆடினார். இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிவந்த நிலையில், உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரில் ராபின்சனின் பந்தில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

ரஹானே அவுட்டானதையடுத்து, 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் உள்ளது இந்திய அணி. அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளைக்கு பின் ரோஹித்துடன் களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், அதை செய்யாமல் அவசரப்பட்டு ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை விரட்டிச்சென்று ஆடி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 2 ரன்னுக்கு வெளியேறினார். 

சூழ்நிலையை கருத்தில்கொண்டு நிதானம் காக்காமல் அவசரப்பட்டு ஆட்டமிழந்துவிட்டார். ராகுல், புஜாரா, கோலி ஆகியோர் எப்படி ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை விரட்டிச்சென்று ஆடி ஆட்டமிழந்தனரோ, அதேபோன்று ரிஷப்பும் ஆட்டமிழந்து வெளியேற, 58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி.

ரோஹித்துடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.
 

click me!