#ENGvsIND ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து ஆட்டமிழந்த ராகுல், புஜாரா, கோலி..! லன்ச்சுக்கு முன் ரஹானேவும் அவுட்

By karthikeyan VFirst Published Aug 25, 2021, 5:55 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி, சற்று மோசமாக பேட்டிங்கை தொடங்கியுள்ளது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு  போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய பேட்டிங்கை தேர்வு செய்தது. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்த போட்டியிலும் களமிறங்கியுள்ளது.

இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல், முதல் ஓவரிலேயே ஆண்டர்சனின் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். முதல் 2 போட்டிகளில் நன்றாக பேட்டிங் ஆடிய ராகுல், இந்த போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து களத்திற்கு வந்த புஜாராவும் ஆண்டர்சனின் பந்தில் வெறும் ஒரு ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினார். 4 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துவிட்ட நிலையில், 3வது விக்கெட்டுக்கு ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த கோலி நன்றாக ஆரம்பித்தார். ஆனாலும் அவரை களத்தில் நிலைக்க அனுமதிக்காமல் தனது முதல் ஸ்பெல்லிலேயே கோலியின்(7) விக்கெட்டையும் வீழ்த்தி மிரட்டினார் ஆண்டர்சன்.

இதையடுத்து ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த ரஹானே, அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒரு மணி நேரம் நன்றாக ஆடினார். இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிவந்த நிலையில், உணவு இடைவேளைக்கு முந்தைய கடைசி ஓவரில் ராபின்சனின் பந்தில் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

ரஹானே அவுட்டானதையடுத்து, 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் உள்ளது இந்திய அணி. அத்துடன் உணவு இடைவேளை விடப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு, 2வது செசனில் ரோஹித்துடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்து ஆடுவார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் நிலைத்து ஆடி நம்பிக்கையளிக்கிறார் ரோஹித். அவருடன் ரிஷப் பண்ட் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தால், இந்திய அணி நல்ல ஸ்கோரை அடிக்கமுடியும். இல்லையென்றால் ரொம்ப கஷ்டம்.
 

click me!