#ENGvsIND ஆரம்பத்துலயே 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை அலறவிடும் ஆண்டர்சன்

Published : Aug 25, 2021, 04:26 PM IST
#ENGvsIND ஆரம்பத்துலயே 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை அலறவிடும் ஆண்டர்சன்

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி ஆரம்பத்திலேயே கேஎல் ராகுல் மற்றும் புஜாரா ஆகிய இருவரது விக்கெட்டையும் இழந்துவிட்டது.  

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆனது. 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது.

3வது டெஸ்ட் போட்டி இன்று லீட்ஸில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது, டேவிட் மலான், ஜோ ரூட்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), மொயின் அலி, சாம் கரன், க்ரைக் ஓவர்டன், ஆலி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்திய அணியின் தொடக்க வீரர் கேஎல் ராகுல், முதல் ஓவரிலேயே ஆண்டர்சனின் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். முதல் 2 போட்டிகளில் நன்றாக பேட்டிங் ஆடிய ராகுல், இந்த போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து களத்திற்கு வந்த புஜாராவும் ஆண்டர்சனின் பந்தில் வெறும் ஒரு ரன்னுக்கு அவுட்டாகி வெளியேறினார். 4 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துவிட்ட நிலையில், 3வது விக்கெட்டுக்கு ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த கோலி நன்றாக ஆரம்பித்தார். ஆனாலும் அவரை களத்தில் நிலைக்க அனுமதிக்காமல் தனது முதல் ஸ்பெல்லிலேயே கோலியின்(7) விக்கெட்டையும் வீழ்த்தி மிரட்டினார் ஆண்டர்சன்.

இதையடுத்து ரோஹித்துடன் ரஹானே ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.
 

PREV
click me!

Recommended Stories

Vaibhav Suryavanshi: இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
Virat Kohli: 12 சீசன்களில் 400+ ரன்கள்..! யாருமே தொட்டுப்பார்க்க முடியாத சாதனை..! மிரட்டும் கோலி