#ENGvsIND அஷ்வினை அணியில் எடுக்காதது ஏன்..? இந்த தடவை கோலி சொல்லும் விளக்கம் இதுதான்

By karthikeyan VFirst Published Aug 25, 2021, 6:27 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியில் அஷ்வின் ஆடவில்லை. அஷ்வினை எடுக்காததற்கு ஒவ்வொரு முறையும் கேப்டன் கோலி ஒரு காரணம் சொல்லிவரும் நிலையில், இந்த முறை என்ன காரணம் கூறியிருக்கிறார் என்று பார்ப்போம்.
 

இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகள் முடிந்த நிலையில், 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 3வது டெஸ்ட் போட்டி இன்று நடந்துவருகிறது. 

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல்(0), புஜாரா(1), கோலி(7) ஆகிய மூவரும் ஆண்டர்சனின் பவுலிங்கில் ஆட்டமிழந்த நிலையில், ரஹானே 18 ரன்னில் ராபின்சனின் பந்தில் ஆட்டமிழந்தார்.  56 ரன்களுக்கே இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் ரோஹித் சர்மா நிலைத்து ஆடிவருகிறார். 

முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் ஆடாததே கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் கண்டிஷனை கருத்தில்கொண்டு அணி தேர்வு அமைந்தது எனவும், அதனால் தான் அஷ்வினை எடுக்கவில்லை என்று கேப்டன் கோலி தெரிவித்திருந்தார்.

ஆனால் 2வது டெஸ்ட் நடந்த லண்டன் லார்ட்ஸில் கடைசி 2 நாள் பந்து திரும்பியது. அதேபோலவே, 3வது டெஸ்ட் போட்டி நடக்கும் லீட்ஸிலும் கடைசி 2-3 நாட்களில் பிட்ச் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் அஷ்வினை கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்றுதான் முன்னாள் வீரர்கள் அனைவருமே கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனாலும் 3வது டெஸ்ட்டில் அஷ்வின் அணியில் எடுக்கப்படவில்லை. டாஸின்போது இதுகுறித்து பேசிய கேப்டன் கோலி, அஷ்வினை அணியில் எடுப்பதாகத்தான் இருந்தோம். ஆனால் கூடுதல் ஃபாஸ்ட் பவுலரை எடுப்பது, இந்த கண்டிஷனில் எதிரணி மீது அழுத்தம் போட உதவும் என்பதால் தான் கூடுதல் ஃபாஸ்ட் பவுலரை எடுத்தோம். இந்த கண்டிஷனில் ஜடேஜா அதிக ஓவர்களை வீசுவார் என்று கோலி தெரிவித்தார்.
 

click me!