ENG vs IND:டெஸ்ட் போட்டினு வந்தால் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் வேற லெவல்!சதமடித்து இந்திய அணியை காப்பாற்றிய பண்ட்

By karthikeyan VFirst Published Jul 1, 2022, 10:30 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் சதமடித்து இந்திய அணியை காப்பாற்றினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ரவீந்திர ஜடேஜா அரைசதம் அடித்தார்.
 

இந்தியா -  இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது போட்டி.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா கொரோனா காரணமாக ஆடாததால், ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டன்சி செய்கிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி:

ஷுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்).

இதையும் படிங்க - தோனிக்கு ஒரு பைக் கொடுத்தோம்; பைக்கை கொடுத்த அடுத்த செகண்ட் தோனியை காணும்! ஸ்ரீநிவாசன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), மேட்டி பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட்,  ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

ஷுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஷுப்மன் கில் (17) மற்றும் புஜாரா (13) ஆகிய இருவரும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பவுலிங்கில் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கிய ஹனுமா விஹாரி 20 ரன்னிலும், விராட் கோலி 11 ரன்னிலும் மேட்டி பாட்ஸின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் ஐயரும் 15 ரன்னில் நடையை கட்டினார்.

98 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் இணைந்து பொறுப்புடன் பேட்டிங் ஆடினர். பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக பேட்டிங் ஆடி, குறிப்பாக வெளிநாடுகளில் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி இந்திய அணியின் மேட்ச் வின்னராக ஜொலித்துவரும் ரிஷப் பண்ட், ஐபிஎல், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் ஆகிய டி20 போட்டிகளில் சரியாக ஆடவில்லை.

இதையும் படிங்க - SL vs AUS: 20 வருஷத்துல டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் அதிவேக வெற்றி..! இலங்கை மண்ணில் தரமான சாதனை

ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடி சதமடித்தார். டெஸ்ட் போட்டி என்று வந்துவிட்டாலே, அபாரமாக பேட்டிங் ஆடுகிறார் ரிஷப் பண்ட். அதை இந்த போட்டியிலும் செய்தார். ரிஷப் பண்ட் சதமடிக்க, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பொறுப்புடன் ஆடிய ஜடேஜா அரைசதம் அடித்தார்.

இருவரும் இணைந்து 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவருகின்றனர். 
 

click me!