தோனிக்கு ஒரு பைக் கொடுத்தோம்; பைக்கை கொடுத்த அடுத்த செகண்ட் தோனியை காணும்! ஸ்ரீநிவாசன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

By karthikeyan VFirst Published Jul 1, 2022, 10:03 PM IST
Highlights

தோனி எந்தளவிற்கு பைக் பிரியர் மற்றும் சென்னையை எந்தளவிற்கு நேசிக்கிறார் என்பதை தெரியப்படுத்தும் விதமாக ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
 

தோனி எவ்வளவு பெரிய பைக்  பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. பழைய பைக் முதல் நவீன கால மாடர்ன் பைக் வரை அனைத்தையும் நிற்கவைப்பதற்கென்றே ராஞ்சியில் தனியாக ஒரு வீடு வைத்திருக்கிறார்.

அந்த வீட்டில் பைக் மற்றும் கார் கலெக்‌ஷனை வைத்திருக்கிறார். கவாசகி நிஞ்சா எச்2, கான்ஃபெடெரெட் ஹெல்கேட், கவாசகி நிஞ்சா ZX-14R, ஹார்லி டேவிட்சன் ஃபேட்பாய், விண்டேஜ் பைக்குகளான பி.எஸ்.ஏ கோல்ட்ஸ்டார், யமாஹா ஆர்டி350 ஆகிய பைக்குகளை சேர்த்துவைத்திருக்கிறார்.

இதையும் படிங்க - SL vs AUS: 20 வருஷத்துல டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் அதிவேக வெற்றி..! இலங்கை மண்ணில் தரமான சாதனை

தோனி பைக் மற்றும் கார்கள் மீது அளாதி ப்ரியம் கொண்டவர். அதேபோல, 2008ம் ஆண்டிலிருந்து இன்று வரை ஐபிஎல்லில் ஆடிவரும் சென்னை மீதும் அளாதியான அன்பு கொண்டவர். 

சென்னை சாலைகளில் பைக் ரைடு செய்வது தோனிக்கு மிகவும் பிடிக்கும். ஐபிஎல்லில் ஆடுவதற்காக சென்னை வரும்போதெல்லாம் பைக் ரைடு செல்வது வழக்கம். ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக ஆடி 4 முறை கோப்பையை வென்று கொடுத்த தோனி, சென்னை மீது அன்பும் பற்றும் கொண்டவர். ராஞ்சி தனது சொந்த ஊர்; சென்னை அவரது 2வது ஊர். தனது கடைசி ஐபிஎல் போட்டியை சென்னையில் ஆடிவிட்டுத்தான் ஓய்வுபெறுவேன் என்று தோனி கூறியிருக்கிறார். அந்தளவிற்கு சென்னை மீது அன்பு கொண்டவர் தோனி.

இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்! முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா; 3ம் இடத்தில் இந்தியா

தோனியின் சென்னை மீதான பற்று, பைக்குகள் மீதான அவரது அன்பு ஆகியவற்றை விளக்கும் விதமாக ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார் சிஎஸ்கே அணி உரிமையாளர் ஸ்ரீநிவாசன்.

இதுகுறித்து பேசிய ஸ்ரீநிவாசன், தோனி ஒரு பைக் பிரியர். தோனி சிஎஸ்கே அணியில் இணைந்த முதல் நாளில் அவருக்கு ஒரு பைக் கொடுத்தோம். யமாஹா FZ-1 என நினைக்கிறோம். அதை கொடுத்த மாத்திரத்தில் தோனியை காணும். அந்த பைக்கை எடுத்துக்கொண்டு சென்னை சாலைகளில் ரைடு சென்றுவிட்டார். தோனிக்கு சென்னையில் பைக் ரைடு செய்வது மிகவும் பிடிக்கும். உங்களுக்கு பக்கத்தில் பைக் ஓட்டிச்சென்றது தோனியாக கூட இருந்திருக்கலாம் என்று ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.
 

click me!