ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்! முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா; 3ம் இடத்தில் இந்தியா

By karthikeyan VFirst Published Jul 1, 2022, 8:31 PM IST
Highlights

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியல், இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிக்கு பிந்தைய அப்டேட்டை பார்ப்போம்.
 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதல் கோப்பையை நியூசிலாந்து வென்றது. 2வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

ஃபைனலுக்கு முன் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் ஃபைனலில் மோதும். எனவே அனைத்து அணிகளும் முதலிரண்டு இடங்களை பிடிக்கத்தான் போராடும்.

இதையும் படிங்க - SL vs AUS: 20 வருஷத்துல டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் அதிவேக வெற்றி..! இலங்கை மண்ணில் தரமான சாதனை

2வது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலிய அணி தான் தொடர்ச்சியாக முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.  இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகளில் பெரும்பாலும் வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகிக்கிறது ஆஸ்திரேலியா.

வெற்றி சதவிகிதங்களின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் அணிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், அதிகமான வெற்றிகளை பெற்றுவரும் ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இதையும் படிங்க - ENG vs IND: ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு..!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இது ஆஸ்திரேலிய அணியின் 6வது வெற்றி இது. இலங்கைக்கு எதிரான வெற்றிக்கு பின், 77.78 வெற்றி சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது ஆஸ்திரேலிய அணி.

71.43 சதவிகிதத்துடன் தென்னாப்பிரிக்க அணி 2ம் இடத்திலும், 58.33 சதவிகிதத்துடன் இந்திய அணி 3ம் இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் அணி 4ம் இடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியனான நியூசிலாந்து அணி, இங்கிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்றதன் விளைவாக, 25.93 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடமான 8ம் இடத்தில் உள்ளது. கடைசி இடமான 9ம் இடத்தில் வங்கதேச அணி உள்ளது.
 

click me!