SLW vs INDW: முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jul 1, 2022, 5:08 PM IST
Highlights

இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 172 ரன்கள் என்ற இலக்கை 38வது ஓவரில் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
 

இந்திய மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் ஆடிவருகிறது. டி20 தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என வென்றது.

அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - SL vs AUS: முதல் டெஸ்ட்டில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

இலங்கை மகளிர் அணி:

ஹாசினி பெரேரா, சமாரி அத்தப்பத்து (கேப்டன்), ஹன்சிமா கருணரத்னே, கவிஷா தில்ஹாரி, ஹர்ஷிதா மாதவி, நிலாக்‌ஷி டி சில்வா, அனுஷா சஞ்ஜீவனி (விக்கெட் கீப்பர்), ஒஷாடி ரணசிங்கே, ராஷ்மி டி சில்வா, இனோகா ரணவீரா, அச்சினி குலசூரியா.

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), யஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், நேணுகா சிங், ராஜேஷ்வரி கெய்க்வாட், மேக்னா சிங்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியில் தொடக்க வீராங்கனை ஹாசினி பெரேரா(37), நிலாக்‌ஷி டி சில்வா(43), மாதவி(28) ஆகிய மூவரைத்தவிர வேறும் யாருமே அவர்கள் அளவிற்குக்கூட ரன் அடிக்கவில்லை. அதனால் 48.2 ஓவரில் வெறும் 171 ரன்களுக்கு இலங்கை மகளிர் அணி ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க - ENG vs IND: பும்ராவிற்கு பதில் அவரைத்தான் கேப்டனாக நியமித்திருக்கணும்..! முன்னாள் டெஸ்ட் ஜாம்பவான் கருத்து

172 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வெர்மா அதிரடியாக ஆடி 35 ரன்கள் அடித்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் (44) மற்றும் ஹர்லீன் தியோல் (34) ஆகிய இருவரும் பொறுப்புடன் பேட்டிங் ஆடினர். பின்வரிசையில் பூஜா வஸ்ட்ராகர் 19 பந்தில் 2 சிக்ஸர்களை விளாசி 21 ரன்கள் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். 38வது ஓவரில் இலக்கை அடித்து இந்திய மகளிர் அணி4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

click me!