ENG vs IND: 71 ரன்களுக்கு 4 விக்கெட்.. கோலி, புஜாரா ஏமாற்றம்..! கில், விஹாரியும் சொதப்பல்.. திணறும் இந்தியா

Published : Jul 01, 2022, 07:25 PM IST
ENG vs IND: 71 ரன்களுக்கு 4 விக்கெட்.. கோலி, புஜாரா ஏமாற்றம்..! கில், விஹாரியும் சொதப்பல்.. திணறும் இந்தியா

சுருக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 71 ரன்களுக்கே டாப் 4 விக்கெட்டுகளை இழந்து திணறிவருகிறது.  

இந்தியா -  இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது போட்டி.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா கொரோனா காரணமாக ஆடாததால், ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டன்சி செய்கிறார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையும் படிங்க - SL vs AUS: 20 வருஷத்துல டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் அதிவேக வெற்றி..! இலங்கை மண்ணில் தரமான சாதனை

இந்திய அணி:

ஷுப்மன் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்).

இங்கிலாந்து அணி:

அலெக்ஸ் லீஸ், ஜாக் க்ராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), மேட்டி பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட்,  ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள்! சேவாக்கின் தேர்வில் கோலிக்கு இடம் இல்ல

ஷுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஷுப்மன் கில் (17) மற்றும் புஜாரா (13) ஆகிய இருவரும் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பவுலிங்கில் ஆட்டமிழந்தனர். 3ம் வரிசையில் இறங்கிய ஹனுமா விஹாரி 20 ரன்னிலும், விராட் கோலி 11 ரன்னிலும் மேட்டி பாட்ஸின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, 71 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி.

ரிஷப் பண்ட்டும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து ஆடிவருகின்றனர். ஷ்ரேயாஸ் ஐயர் களத்திற்கு வந்ததுமுதலே அடித்து ஆட தொடங்கியுள்ளார். அணியின் ஸ்கோரை மனதில் வைத்து ஷ்ரேயாஸ் ஐயர் வேகமாக ஸ்கோர் செய்துவருகிறார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: ஆசிய போட்டியில் தங்கம் வெல்லுமா இந்தியா? 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!
Gautam Gambhir: அயர்லாந்திடம் வாங்கிய அடி! கவுதம் கம்பீரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்! கடும் விமர்சனம்!