
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது இந்திய அணி.
டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டனில் தொடகி நடந்துவருகிறது. இந்த போட்டி முடிந்ததும், ஜூலை 7, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும், ஜூலை 12, 14, 17 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் நடக்கவுள்ளன.
இந்த தொடர்களுக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டனாக இருந்துவந்த இயன் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், ஜோஸ் பட்லர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அனிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இங்கிலாந்து டி20 அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஹாரி ப்ரூக், சாம் கரன், ரிச்சர்ட் க்ளீசன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், டைமல் மில்ஸ், மேத்யூ பார்கின்சன், ஜேசன் ராய், ஃபிலிப் சால்ட், ரீஸ் டாப்ளி, டேவிட் வில்லி.
இங்கிலாந்து ஒருநாள் அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஹாரி ப்ரூக், ப்ரைடன் கார்ஸ், சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், க்ரைக் ஓவர்டன், மேத்யூ பார்கின்சன், ஜோ ரூட், ஜேசன் ராய், ஃபிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்ளி, டேவிட் வில்லி.