டெஸ்ட் கிரிக்கெட்டில் 69 ஆண்டுகால சாதனையை தகர்த்து வரலாறு படைத்தார் ரிஷப் பண்ட்..! சாதனைகளின் நாயகன் ரிஷப்

By karthikeyan VFirst Published Jul 4, 2022, 4:21 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் சதம் மற்றும் 2வது இன்னிங்ஸில் அரைசதம் அடித்துள்ள ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 69 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரிஷப் பண்ட் (146) மற்றும் ரவீந்திர ஜடேஜா (104) ஆகிய இருவரின் அபார சதங்களால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, பேர்ஸ்டோவின் அபாரமான சதத்தால்(106) முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் அடித்தது.

132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, 190 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடிவருகிறது. அரைசதம் அடித்த புஜாரா 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க  புஜாரா மாதிரி ஆடிகிட்டு இருந்த பேர்ஸ்டோவை ரிஷப் பண்ட் மாதிரி ஆட வச்சது கோலியோட ஸ்லெட்ஜிங் தான் - சேவாக்

புஜாராவுடன் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடிய ரிஷப் பண்ட்டும் அரைசதம் அடித்தார். முதல் இன்னிங்ஸில் சதமடித்து 146 ரன்களை குவித்த ரிஷப் பண்ட் 2வது இன்னிங்ஸில் அரைசதம் கடந்து ஆடிவருகிறார்.

இதன்மூலம் வெளிநாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்களை குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் 1953ம் ஆண்டு விஜய்  மஞ்சரேக்கர் கிங்ஸ்டனில் ஒரு டெஸ்ட் போட்டியில் 161 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. அதன்பின்னர் தோனி உட்பட எத்தனையோ சிறந்த விக்கெட் கீப்பர்கள் விளையாடியும், அவர்களால் இந்த சாதனையை முறியடிக்க முடியாமல் இருந்தது.

இதையும் படிங்க - கிரிக்கெட்டை தாண்டி விம்பிள்டன் டென்னிஸ் வரை சென்ற வாத்தி கம்மிங்..! ரோஜர் ஃபெடரருக்கு போட்ட கேப்ஷன் வைரல்

69 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது ரிஷப் பண்ட் அந்த சாதனையை முறியடித்துள்ளார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் மொத்தமாக(2 இன்னிங்ஸிலும் சேர்த்து) 200 ரன்களை கடந்து ஆடிவருகிறார். 

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக திகழும் ரிஷப் பண்ட், டி20 கிரிக்கெட்டில் சொதப்பினாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக தனது அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திவருகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் 2 சதம், ஆஸ்திரேலியாவில் ஒரு சதம், தென்னாப்பிரிக்காவில் ஒரு சதம் என இந்திய விக்கெட் கீப்பராக பல்வேறு சாதனைகளை புரிந்துவருகிறார். 

அந்தவரிசையில் இப்போது வெளிநாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்களை குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 

click me!