டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்து சாதனை படைத்தார் ரைலீ ரூசோ. அவரது அதிரடி சதத்தால் 20 ஓவரில் 205 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 206 ரன்கள் என்ற இலக்கை வங்கதேசத்துக்கு நிர்ணயித்துள்ளது.
டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் இடையேயான போட்டி சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்க அணி:
undefined
குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வைன் பர்னெல், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, டப்டைஸ் ஷம்ஸி.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பரிதாப தென்னாப்பிரிக்கா.. மழையால் புள்ளியை இழந்த கொடுமை..! அதிர்ஷ்டசாலி ஜிம்பாப்வே
வங்கதேச அணி:
நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன், நூருல் ஹசன், மொசாடெக் ஹுசைன், டஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா ஃபார்மில் இல்லாத நிலையில், இந்த போட்டியிலும் வெறும் 2 ரன்னுக்கு வெளியேறினார். அதன்பின்னர் டி காக்குடன் ஜோடி சேர்ந்த ரைலீ ரூசோ வங்கதேச பவுலிங்கை அடித்து நொறுக்கினார்.
டி காக் மற்றும் ரூசோ ஆகிய இருவருமே பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து விளாசி ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். 2வது விக்கெட்டுக்கு ரூசோ - டி காக் இருவரும் இணைந்து 81 பந்தில் 168 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த டி காக் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி சதமடித்த ரைலீ ரூசோ, 56 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 109 ரன்களை குவித்தார்.
டி20 உலக கோப்பையில் சதமடித்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற சாதனையை ரைலீ ரூசோ படைத்தார். மேலும் டி20 உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த 5வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதையும் படிங்க - சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி
ரூசோ - டி காக் அதிரடியால் 20 ஓவரில் 205 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்க அணி, 206 ரன்களை வங்கதேசத்துக்கு இலக்காக நிர்ணயித்தது.