டி20 உலக கோப்பை: தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் போட்டி டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan V  |  First Published Oct 27, 2022, 8:37 AM IST

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 


டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், சூப்பர் 12 சுற்றில் இன்று க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு இடையே போட்டிகள் நடக்கின்றன. இன்றைய முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

சிட்னியில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. முதல் போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக தென்னாப்பிரிக்க எளிதாக வெற்றி பெற்றிருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகளுக்கு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் வேட்கையில் களமிறங்கியுள்ளது தென்னாப்பிரிக்கா.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை: பரிதாப தென்னாப்பிரிக்கா.. மழையால் புள்ளியை இழந்த கொடுமை..! அதிர்ஷ்டசாலி ஜிம்பாப்வே

நெதர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் போராடி வெற்றி பெற்றிருந்தாலும், வெற்றி பெற்ற நம்பிக்கையில் களம்காண்கிறது வங்கதேசம். இந்த போட்டிய்ல் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வைன் பர்னெல், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, டப்டைஸ் ஷம்ஸி.

இதையும் படிங்க - சேஸிங்கில் நான் “கிங்”டா.. மெல்பர்னில் பாகிஸ்தானை பட்டாசாக வெடித்து தீபாவளி கொண்டாடிய கோலி

வங்கதேச அணி:

நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், மெஹிடி ஹசன், நூருல் ஹசன், மொசாடெக் ஹுசைன், டஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத், முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.
 

click me!