#AUSvsIND டெஸ்ட் தொடர்.. இந்திய அணியில் ஏகப்பட்ட பிரச்னைகள்..! லிஸ்ட் போட்டு அடித்த பாண்டிங்

By karthikeyan VFirst Published Nov 21, 2020, 6:14 PM IST
Highlights

இந்திய அணியில் இருக்கும் ஏகப்பட்ட பிரச்னைகளை பட்டியலிட்டு, அதற்கான இந்திய அணியின் முடிவுகளை காண ஆவலாக இருப்பதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
 

3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதலில் ஒருநாள் தொடர், அதன்பின்னர் டி20 தொடர், கடைசியாக டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டுமே இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆடுகிறார். அவருக்கு குழந்தை பிறக்கவுள்ளதால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியா திரும்புகிறார். விராட் கோலி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். அதேபோல ஆஸ்திரேலியாவில் மிகச்சிறந்த அனுபவம் கொண்ட சீனியர் ஃபாஸ்ட் பவுலரான இஷாந்த் சர்மா ஆடுவது சந்தேகம்.

இந்நிலையில், இந்திய அணியில் இருக்கும் பிரச்னைகள் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாண்டிங், கோலி ஆடாததால் கேப்டன்சி பொறுப்பை ஏற்கும் ரஹானேவுக்கு அழுத்தம் அதிகரிக்கும். கோலி ஆடாத 3 போட்டிகளில் யாரை, அவரது பேட்டிங் ஆர்டரான 4ம் வரிசையில் இறக்குவது என்பதை இந்திய அணி முடிவு செய்யவில்லை. தொடக்க வீரர்கள் யார் என்பது குறித்த தெளிவும் இந்திய அணியிடம் இல்லை.

ஷமி, பும்ராவுடன் மற்றொரு ஃபாஸ்ட் பவுலராக ஆடப்போவது இஷாந்த் சர்மாவா அல்லது உமேஷ் யாதவா என்பதோ அல்லது சைனியா, சிராஜா என்பதோ கூட தெரியவில்லை. ஸ்பின்னர் யார் என்பதும் தெரியவில்லை. நிறைய ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அவர்களில் யார் ஆடப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அடிலெய்டில் நடக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்தில் ஆடப்போவது எந்த ஸ்பின்னர் என்பது தெரியவில்லை.

கடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி நன்றாக ஆடியது. ஆனால் அப்போது ஸ்மித்தும் வார்னரும் ஆடாதது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இம்முறை அவர்கள் ஆடுவதால் இந்திய அணிக்கு சவால் அதிகம் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.
 

click me!