அவரு எந்த தப்புமே செய்யல; பின்ன ஏன் டீம்ல இருந்து தூக்கணும்? அவருதான் ஓபனிங்கில் இறங்கணும்.. பாண்டிங் அதிரடி

By karthikeyan VFirst Published Nov 20, 2020, 10:00 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக யார் யார் இறங்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டனும் மிகப்பெரிய ஜாம்பவானுமான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.
 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக யார் யார் இறங்க வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டனும் மிகப்பெரிய ஜாம்பவானுமான ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது. கடந்த 2018-2019 சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது இந்திய அணி.

எனவே இந்த முறை இந்திய அணியை பழிதீர்க்கும் முனைப்பில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு, கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் கோலி ஆடாதது அனுகூலமான விஷயமாக அமையும். இந்த தொடர் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

வார்னருடன் தொடக்க வீரராக இறங்கிவரும் ஜோ பர்ன்ஸுக்கு பதிலாக இளம் வீரர் புகோவ்ஸ்கி இறங்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்துவரும் நிலையில், அதற்கான அவசியம் இல்லை என ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்திருந்த நிலையில், அதே கருத்தைத்தான் பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய பாண்டிங், ஜோ பர்ன்ஸ் எந்த தவறுமே செய்யவில்லை. கடந்த கோடைக்கால தொடரில் கூட அருமையாக ஆடினார். டெஸ்ட் போட்டியில் ஆடும் வீரர்கள் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கின்றனர். தேவையில்லாமல் மாற்றங்களை செய்யக்கூடாது. ஒரு கேப்டனாக தனது அணி வீரர்களிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டுவருவது ஒரு கேப்டனின் கடமை என்று பாண்டிங் தெரிவித்தார்.
 

click me!