ஐபிஎல் 2020: அஷ்வினின் ஒற்றை கேள்வியால் பொட்டிப்பாம்பாய் அடங்கிய பாண்டிங்..!

By karthikeyan VFirst Published Sep 9, 2020, 7:04 PM IST
Highlights

மன்கட் விவகாரத்தில் அஷ்வினிடம் சரணடைந்தார் டெல்லி கேபிடள்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.
 

ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் டெல்லி கேபிடள்ஸ் அணி தீவிர பயிற்சி செய்துவருகிறது.

இந்தியாவின் பிரைம் ஸ்பின்னர் அஷ்வின் இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடவுள்ளார். கடந்த 2 சீசன்களாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஷ்வின் இந்த சீசனில் முதல் முறையாக டெல்லி அணியில் ஆடவுள்ளார்.

இந்த சீசனில் டெல்லி அணியில் ஆடும் அஷ்வினை மன்கட் ரன் அவுட் செய்ய விடமாட்டேன் என்று கடந்த சில தினங்களுக்கு முன் கொதித்த்திருந்தார் ரிக்கி பாண்டிங்.

மன்கட் ரன் அவுட் என்பது, ரன்னர் முனையில் இருக்கும் வீரர் பவுலர் பந்துவீசுவதற்கு முன்பாகவே க்ரீஸை விட்டு நகர்ந்தால் செய்யும் ரன் அவுட். பெரும்பாலான வீரர்கள் டெத் ஓவர்களில் இதுமாதிரி பவுலர் பந்துவீசுவதற்கு முன்பாகவே க்ரீஸை விட்டு நகர்ந்து வெளியேறிவிடுவார்கள். கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர், அஷ்வின் பந்துவீசும் முன்பே க்ரீஸை விட்டு நகர்ந்ததால் அஷ்வின் அவரை மன்கட் ரன் அவுட் செய்தார். ஐசிசி விதிப்படி அது அவுட் தான் என்பதால் பட்லர் வெளியேறினார். விதிப்படி அது சரிதான் என்றாலும், தார்மீக ரீதியில் அது விளையாட்டு ஸ்பிரிட் கிடையாது என அப்போதே பல முன்னாள் வீரர்கள் கருத்து கூறினர். ஆனாலும் விதிக்குட்பட்டே, தான் மன்கட் ரன் அவுட் செய்ததாகவும், அதில் எந்த தவறும் இல்லை என்பதில் அஷ்வின் உறுதியாக இருந்தார்.

இந்நிலையில், அஷ்வின் இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடவுள்ளதால், அவரை மன்கட் செய்ய அனுமதிக்கமாட்டேன் என்றும் அது ஸ்போர்ட்ஸ் ஸ்பிரிட் கிடையாது என்றும் இதுகுறித்து அஷ்வினிடம் பேசுவேன் என்றும் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் பாண்டிங் தெரிவித்திருந்தார்.

அதேபோலவே, மன்கட் குறித்து அஷ்வினிடம் பேசினார். அப்போது அஷ்வின் கேட்ட நியாயமான கேள்விக்கு என்ன பதிலளிப்பது என்று தெரியாத பாண்டிங், பந்துவீசும் முன்பே க்ரீஸை விட்டு பேட்ஸ்மேன் வெளியேறினால் ரன் அபராதம் விதிக்குமாறு விதியை மாற்றியமைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள பாண்டிங், மன்கட் குறித்து அஷ்வினிடம் ஆலோசித்தேன். அவர் விதிக்குட்பட்டே மன்கட் செய்தேன் என்பதில் உறுதியாக இருக்கிறார். அஷ்வின் என்னிடம் நியாயமான ஒரு கேள்வியையும் கேட்டார். நான்(அஷ்வின்) பந்துவீசுகிறேன்.. கடைசி பந்தில் எதிரணியின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்று வைத்துக்கொள்வோம். அப்படியான சூழலில் ரன்னர் முனையில் நிற்கும் பேட்ஸ்மேன், நான் பந்துவீசுவதற்கு முன்பே க்ரீஸை விட்டு நகர்ந்து பாதி தூரம் சென்றுவிட்டால், நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்று அஷ்வின் என்னிடம் கேட்டார். அவரது கேள்வி நியாயமானதுதான். 

Also Read - ரூ.10.75 கோடிக்கு அவரை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன..? அனில் கும்ப்ளே விளக்கம்

நான் அவரிடம் என்ன சொன்னேன் என்றால், பந்துவீசாமல் நின்று க்ரீஸை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரிக்கை விடுங்கள் என்றேன். அந்தளவிற்கு மிகவும் நெருக்கமான போட்டிகள் டெல்லி அணிக்கு வருகிறதா என்று முதலில் பார்ப்போம். அதேநேரத்தில் பேட்ஸ்மேனும் ஏமாற்றக்கூடாது.  பந்துவீசும் முன்பே க்ரீஸை விட்டு பேட்ஸ்மேன் ரன் ஓடுவதற்காக நகர்ந்து செல்கிறார் என்றால், ரன் அபராதம் விதிக்கும்படி விதியை மாற்றலாம் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.

click me!