மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் ஆர்சிபியின் வெற்றிக்கு வித்திட்ட எல்லீஸ் பெர்ரி வீடியோ வெளியிட்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆண்கள் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனில் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த ஆர்சிபி மகளிர் அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டிராபியை கைப்பற்றியது.
இதுவரையில் 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் ஆர்சிபி ஆண்கள் அணியானது ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றாத நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனிலேயே ஆர்சிபி மகளிர் அணி டிராபியை வென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆர்சிபி மகளிர் அணி 9 போட்டிகளில் விளையாடி 347 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த நிலையில் இன்று தொடங்கும் ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டிராபியை கைப்பற்ற வேண்டும் என்று ஆர்சிபி மகளிர் வீராங்கனை எல்லீஸ் பெர்ர்ரி வீடியோ வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இது வரையில் ஐபிஎல் போட்டிகளை வைத்து பார்க்கும் போது RCB கொண்டிருக்கும் வரலாற்றில், அவர்கள் பட்டத்தை வெல்லத் தகுதியானவர்கள். ஏற்கனவே ஆர்சிபி மகளிர் அணி டிராபியை தங்களுக்கு சொந்தமாக்கியது. இதே போன்று ஆர்சிபி ஆண்கள் அணியினரும் டிராபியை தங்கள் வசப்படுத்த வேண்டும் என்று பெங்களூரு ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர். இறுதியாக, எல்லீஸ் பெர்ரி புகழ்பெற்ற வாசகமான ஈ சாலா கப் நம்து என்ற வாசகத்துடன் அணிக்கான தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
ನೋಡಿ ನಮ್ಮ ಎಲ್ಲಿಸ್ ಪೆರ್ರಿ 'ಈ ಸಲ ಕಪ್ ನಮ್ದು' ಅಂತಿದಾರೆ😍😍😍❤️❤️❤️
ನೋಡಿರಿ TATA IPL 2024 Chennai v Bengaluru ಮಾರ್ಚ್ 22 ಸಂಜೆ 6:30 ರಿಂದ ನಿಮ್ಮ ದಲ್ಲಿ pic.twitter.com/A4PNzRoSUB