IPL 2024: மாஸ்டர்மைண்ட் தோனிக்காகவே சிஎஸ்கே போட்டியை பார்க்கலாம்! சமீர் ரிஸ்விக்கு வாய்ப்பு கிடைக்குமா?

By Rsiva kumarFirst Published Mar 22, 2024, 3:16 PM IST
Highlights

சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு டாஸ் நிகழ்வோடு தொடங்குகிறது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அந்த தருணம் வந்துவிட்டது. தோனியின் தரிசனத்திற்காக காத்துக்கொண்டிருந்த எத்தனையோ ரசிகர்களுக்கு கடைசியில் தோனியின் தரிசனமும் கிடைக்க போகிறது. ஆனால், ஒரு வருத்தம் என்னவென்றால் தோனி கேப்டன் இல்லை. சிஎஸ்கே அணியின் 4ஆவது கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையிலான சிஎஸ்கே அணியானது முதல் முறையாக இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. இன்று தொடங்கும் சென்னை போட்டியை ஏன் பார்க்க வேண்டும்? அப்படி அதில் என்ன சிறப்புகள் இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க….

தோனியின் வருகை:

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றியதோடு தோனியின் கேப்டன்ஷியின் சகாப்தம் முடிந்துவிட்டது. இன்று தொடங்கும் ஐபிஎல் முதல் போட்டியின் மூலமாக தோனி ஒரு பீல்டராக களமிறங்குகிறார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்த தோனி அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்போது ஃபிட்டாக இந்த சீசனில் நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். இந்த சீசன் முழுவதும் தோனி விளையாடுவார் என்று சிஎஸ்கே தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

கடந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய தோனி 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் 7 கேட்சுகள், 3 ஸ்டெம்பிங் அடங்கும்.

ருதுராஜ் கெய்க்வாட்:

சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக அவதாரம் எடுத்துள்ள ருதுராஜ் கெய்க்வாட் அணியை எப்படி வழி நடத்துவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இவருடன் ஓபனிங் இறங்கும் அந்த வீரருக்கான போட்டியில் ரச்சின் ரவீந்திரா மற்றும் அஜின்க்யா ரஹானே இருவரும் இருக்கின்றனர். கடந்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடிய 16 போட்டிகளில் விளையாடி 635 ரன்கள் எடுத்துள்ளார்.

இதுவரையில் 52 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1797 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம், 14 அரைசதங்கள் அடங்கும். 159 பவுண்டரி, 73 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.  

டேரில் மிட்செல்:

உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல்லை சிஎஸ்கே ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்தது. சிஎஸ்கே அணியில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இதுவரையில் 195 டி20 போட்டிகளில் விளையாடிய மிட்செல் 4251 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 21 அரைசதங்கள் அடங்கும். மேலும், 76 விக்கெட்டுகளும் அடங்கும்.

ஷர்துல் தாக்கூர்:

சிஎஸ்கே அணிக்கு திரும்பிய ஷர்துல் தாக்கூர் சிறப்பாக பந்து வீசுவதோடு பேட்டிங்கிலும் களக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார். இவர், 2028, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன்களில் சிறப்பாக விளையாடி விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இதுவரையில் 86 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஷர்துல் தாக்கூர் 89 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மேலும், 286 ரன்களும் அடித்துள்ளார்.

சமீர் ரிஸ்வி:

சிஎஸ்கே அணியில் ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சமீர் ரிஸ்விக்கு இந்த சீசனில் இன்றைய போட்டியில் பிளேயிங் 11ல் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அவரை அதிக தொகைக்கு சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்தில் எடுத்துள்ளது. முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் சமீர் ரிஸ்வி எப்படி விளையாடுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். சுரேஷ் ரெய்னாவிற்கு பிறகு சிஎஸ்கே அணியில் நம்பர் 3ல் சிறந்த வீரர் யாரும் அமையவில்லை. அதனை சமீர் ரிஸ்வி ஈடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2023/24 சீசன்களில் சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 277 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 2 அரைசதங்கள் அடங்கும்.

கடந்த சீசனைப் போன்று இந்த சீசனிலும் சிஎஸ்கே சாம்பியனாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்….

click me!