IPL 2023: முக்கியமான போட்டியில் டாஸ் ஜெயித்த ஆர்சிபி..! சன்ரைசர்ஸ் அணியில் அதிரடி மாற்றங்கள்

By karthikeyan V  |  First Published May 18, 2023, 7:25 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் இன்று நடக்கும் முக்கியமான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 


ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறிவிட்டன.

தலா 13 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், கேகேஆர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு கடைசி ஒரு போட்டி மட்டுமே எஞ்சியிருப்பதால் இந்த அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறுவது கடினம்.

Latest Videos

13 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 15 புள்ளிகளை பெற்று 2 மற்றும் 3ம் இடங்களில் இருக்கும் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அதிகமுள்ளது. 13 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் 12 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்றுள்ள ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ICC ODI தரவரிசையில் பாக்., வீரர்கள் ஆதிக்கம்..! கோலி, ரோஹித்தை பின்னுக்குத் தள்ளிய அயர்லாந்து வீரர்

இந்நிலையில், இன்று ஹைதராபாத்தில் நடக்கும் போட்டியில் வெற்றி கட்டாயத்துடன் களமிறங்கும் ஆர்சிபி அணி சன்ரைசர்ஸை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்குகிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹாரி ப்ரூக் மற்றும் கார்த்திக் தியாகி ஆகிய இருவரும் அணியில் இணைந்துள்ளனர். 

ஆர்சிபி அணி: 

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத், ஷபாஸ் அகமது, மைக்கேல் பிரேஸ்வெல், வைன் பார்னெல், ஹர்ஷல் படேல், கரன் ஷர்மா, முகமது சிராஜ்.

IPL 2023: பஞ்சாப்பின் உத்தி சரியானதுதான்.. ஆனால் ரொம்ப லேட்டா பண்ணிட்டாங்க..! சேவாக் அதிரடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், ஹாரி ப்ரூக், க்ளென் ஃபிலிப்ஸ், அப்துல் சமாத், கார்த்திக் தியாகி, மயன்க் தாகர், புவனேஷ்வர் குமார், நிதிஷ் ரெட்டி.

click me!