#CSKvsRCB வசமா சிக்கிய விராட் கோலி..! மேட்ச்சும் போச்சு; காசும் போச்சு

By karthikeyan VFirst Published Apr 25, 2021, 10:38 PM IST
Highlights

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

ஐபிஎல் 14வது சீசனில் முதல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி, சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் முதல் தோல்வியை பெற்றது.

மும்பை வான்கடேவில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி, கடைசி ஓவரில் ஜடேஜா 5 சிக்ஸர்களுடன் 37 ரன்களை விளாசியதன் விளைவாக, 20 ஓவரில் 191 ரன்கள் அடிக்க, 192 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி, 20 ஓவரில் வெறும் 122 ரன்கள் மட்டுமே அடித்து 69 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்தது போதாதென்று, பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கேவிற்கு எதிராக ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதையடுத்து, ஆர்சிபி கேப்டன் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த முறை பந்துவீச தாமதமானால், ஆர்சிபி கேப்டன் கோலிக்கு ரூ.24 லட்சம் அபராதமும், அணி வீரர்களுக்கு ஊதியத்தில் 25 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்படும். மூன்றாவது முறை அதே தவறு நடந்தால், கேப்டனுக்கு ரூ.30 லட்சம் அபராதத்துடன் ஒரு போட்டியில் ஆட தடையும் விதிக்கப்படும். மற்ற வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்.
 

click me!