#SRHvsDC பிரித்வி ஷா அதிரடி அரைசதம்.. சன்ரைசர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த டெல்லி கேபிடள்ஸ்

Published : Apr 25, 2021, 09:13 PM IST
#SRHvsDC பிரித்வி ஷா அதிரடி அரைசதம்.. சன்ரைசர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த டெல்லி கேபிடள்ஸ்

சுருக்கம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணி 20 ஓவரில்  159 ரன்கள் அடித்து  160 ரன்களை சன்ரைசர்ஸுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.  

டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர் பிரித்வி ஷா, தொடக்கம் முதலே அடித்து ஆடினார். பவர்ப்ளேயை பயன்படுத்தி அடித்து ஆடிய பிரித்வி ஷா, அரைசதம் அடித்தார். பிரித்வி ஷாவின் அதிரடியால்  டெல்லி அணிக்கு பவர்ப்ளேயில் 51 ரன்கள் கிடைத்தது.

தவான் 28 ரன்னில் ஆட்டமிழக்க, அரைசதம் அடித்த பிரித்வி ஷா 53 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். 10 ஓவரில் டெல்லி அணி 80 ரன்கள் அடித்திருந்தாலும், கடைசி 10 ஓவர்களில் டெல்லி அணியால் பெரிய ஸ்கோரை அடிக்க முடியவில்லை.

ரிஷப் பண்ட் அடித்து ஆடினாலும், பெரிய ஷாட் அடிக்க முடியாமல் ஸ்மித் திணற, ரன் வேகம் குறைந்தது. 27 பந்தில் 37 ரன் அடித்து ரிஷப் ஆட்டமிழக்க, ஹெட்மயர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். கலீல் அகமது வீசிய கடைசி ஓவரில் ஸ்மித் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடிக்க, 20 ஓவரில் 159 ரன்களை அடித்த டெல்லி அணி, 160 ரன்கள் என்ற சவாலான இலக்கை சன்ரைசர்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.

சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் 160 ரன்கள் என்பது சவாலான இலக்கே.
 

PREV
click me!

Recommended Stories

இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?
IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!