#IPL2021 ஆடாமலே அவுட்டான ராஜஸ்தான் ராயல்ஸின் அடுத்த விக்கெட்..!

Published : Apr 25, 2021, 10:01 PM IST
#IPL2021 ஆடாமலே அவுட்டான ராஜஸ்தான் ராயல்ஸின் அடுத்த விக்கெட்..!

சுருக்கம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடும் ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் ஆண்ட்ரூ டையும் ஐபிஎல் 14வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.  

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடும் ஆஸி., ஃபாஸ்ட் பவுலர் ஆண்ட்ரூ டையும் ஐபிஎல் 14வது சீசனிலிருந்து முழுவதுமாக விலகியுள்ளார்.

ஐபிஎல் 14வது சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திணறிவருகிறது. முதல் போட்டியில் ஆடிய பென் ஸ்டோக்ஸ், காயம் காரணமாக இந்த சீசனிலிருந்து முழுவதுமாக விலகிய நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த மற்றொரு வீரரான லிவிங்ஸ்டன், கொரோனா பாதுகாப்பு வளையத்தை சமாளிக்க முடியாமல் இந்த சீசனிலிருந்து விலகினார்.

கையில் ஏற்பட்ட காயத்தால், ஐபிஎல்லில் முதல் சில போட்டிகளில் ஆர்ச்சர் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சீசனிலிருந்தே முழுவதுமாக விலகிவிட்டார். 

பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன், ஆர்ச்சர் ஆகிய மூவரும் விலகிய நிலையில், தற்போது ஆஸி., ஃபாஸ்ட் பவுலரான ஆண்ட்ரூ டையும் இந்த சீசனிலிருந்து விலகியுள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான் அணியை சேர்ந்த 3 வெளிநாட்டு வீரர்கள் இந்த சீசனிலிருந்து விலகிய நிலையில், 4வது வீரராக ஆண்ட்ரூ டையும் வெளியேறியுள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!