RCB vs KKR பலப்பரீட்சை.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Mar 30, 2022, 03:02 PM ISTUpdated : Mar 30, 2022, 05:39 PM IST
RCB vs KKR பலப்பரீட்சை.. இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

shஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன. மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது.

ஆர்சிபி அணி அதன் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸிடம் தோற்றது. ஆனால் கேகேஆர் அணி சிஎஸ்கேவை வீழ்த்தி வெற்றி கண்டது. எனவே கேகேஆர் அணி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலும், ஆர்சிபி அணி இந்த சீசனில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பிலும் களமிறங்குகின்றன.

இந்த போட்டிக்கான ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்வதற்கான வாய்ப்பில்லை. ஃபாஃப் டுப்ளெசிஸ் தலைமையிலான அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி ஆடும்.

உத்தேச ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

கேகேஆர் அணியில் எந்த மாற்றமும் செய்வதற்கான அவசியமே இல்லை. கேகேஆர் அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் செம வலுவாக உள்ளது.

உத்தேச கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷெல்டான் ஜாக்சன்., உமேஷ் யாதவ், ஷிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ind Vs SA 1st T20: கில், பாண்டியா கம்பேக்.. புல் போர்சுடன் களம் இறங்கும் இந்திய அணி..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!