சஞ்சு சாம்சன் காட்டடி அரைசதம்.. பட்லர், படிக்கல், ஹெட்மயர் அதிரடி பேட்டிங்! SRHக்கு கடின இலக்கை நிர்ணயித்த RR

Published : Mar 29, 2022, 09:32 PM IST
சஞ்சு சாம்சன் காட்டடி அரைசதம்.. பட்லர், படிக்கல், ஹெட்மயர் அதிரடி பேட்டிங்! SRHக்கு கடின இலக்கை நிர்ணயித்த RR

சுருக்கம்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 20 ஓவரில் 210 ரன்களை குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 211 ரன்கள் என்ற கடினமான இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஆடிவருகின்றன. புனேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்,விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நேதன் குல்ட்டர்நைல், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம், அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெஃபெர்டு, புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக். 

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். 2 முறை நோ பாலால் தப்பிய ஜோஸ் பட்லர் 28 பந்தில் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கி அடித்து ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக பேட்டிங் ஆடி 25 பந்தில் அரைசதம் அடித்தார். 27 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன். அதிரடியாக ஆடிய தேவ்தத் படிக்கல் 29 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் அடித்து உம்ரான் மாலிக்கின் வேகத்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார்.

பின்வரிசையில் இறங்கிய ஷிம்ரான் ஹெட்மயர்  13 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 32 ரன்களை விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் 200 ரன்களை கடக்க உதவினார். 20 ஓவரில் 210 ரன்களை குவித்த ராஜஸ்தான் அணி, 211 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Shreyas: கேப்டனாக இப்படியா தொடக்கம்? அயர்லாந்திடம் வரலாற்று தோல்வி... ஷ்ரேயாஸ்ன் வைரல் ரியாக்ஷன்!
IND vs IRE 1st T20: முதல் டி20-யில் இந்தியாவை அலற விட்ட அயர்லாந்து.. மாஸ் வெற்றி.. சரித்திர சாதனை!