IPL 2022: சன்ரைசர்ஸை 149 ரன்களுக்கு சுருட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

Published : Mar 30, 2022, 07:14 AM IST
IPL 2022: சன்ரைசர்ஸை 149 ரன்களுக்கு சுருட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

சுருக்கம்

ஐபிஎல் 15வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 61  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஐபிஎல் 15வது சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிய போட்டி புனேவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்,விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நேதன் குல்ட்டர்நைல், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம், அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெஃபெர்டு, புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக். 

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். 2 முறை நோ பாலால் தப்பிய ஜோஸ் பட்லர் 28 பந்தில் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கி அடித்து ஆடிய கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக பேட்டிங் ஆடி 25 பந்தில் அரைசதம் அடித்தார். 27 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார் சஞ்சு சாம்சன். அதிரடியாக ஆடிய தேவ்தத் படிக்கல் 29 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 41 ரன்கள் அடித்து உம்ரான் மாலிக்கின் வேகத்தில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார்.

பின்வரிசையில் இறங்கிய ஷிம்ரான் ஹெட்மயர்  13 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 32 ரன்களை விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் 200 ரன்களை கடக்க உதவினார். 20 ஓவரில் 210 ரன்களை குவித்த ராஜஸ்தான் அணி, 211 ரன்கள் என்ற கடின இலக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நிர்ணயித்தது.

211 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணியில் கேன் வில்லியம்சனும் அபிஷேக் ஷர்மாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வில்லியம்சனை வெறும் 2 ரன்னில் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தினார். 3ம் வரிசையில் இறங்கிய ராகுல் திரிபாதியையும் ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார் பிரசித் கிருஷ்ணா. நிகோலஸ் பூரனை டிரெண்ட் போல்ட் டக் அவுட்டாக்க, அபிஷேக் ஷர்மாவை 9 ரன்னில் யுஸ்வேந்திர சாஹல் வீழ்த்தினார். இளம் வீரர் அப்துல் சமாத்தையும் 4 ரன்னில் வெளியேற்றினார் சாஹல்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் அரைசதம் அடித்து கடைசி வரை களத்தில் நின்றார். வாஷிங்டன் சுந்தர் 8ம் வரிசையில் இறங்கி 11 பந்தில் 30 ரன்களை விளாசி நல்ல கேமியோ ரோல் பிளே செய்தார். ஆனால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 149 ரன்கள் மட்டுமே அடித்ததால் 61 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!