India vs Sri Lanka: இந்திய அணியில் ஜடேஜா உள்ளே.. கோலி வெளியே..!

Published : Feb 18, 2022, 04:13 PM IST
India vs Sri Lanka: இந்திய அணியில் ஜடேஜா உள்ளே.. கோலி வெளியே..!

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இணைகிறார். ஜஸ்ப்ரித் பும்ராவும் இந்த தொடருக்கான இந்திய அணியில் இணைகிறார்.  

இலங்கை அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இன்று நான்காவது டி20 போட்டி நடக்கும் நிலையில், கடைசி போட்டி வரும் 20ம் தேதி நடக்கிறது.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் ஆடிவரும் நிலையில், இன்று 2வது டி20 போட்டியும், வரும் 20ம் தேதி 3வது மற்றும் கடைசி டி20 போட்டியும் நடக்கிறது. அதன்பின்னர் இலங்கை அணி இந்தியாவிற்கு வந்து 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.

வரும் 24ம் தேதி முதல் டி20 போட்டி லக்னோவிலும், அதன்பின்னர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தர்மசாலாவில் கடைசி 2 டி20 போட்டிகளும் நடக்கின்றன. மார்ச் 4ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியிலும், மார்ச் 12ம் தேதி 2வது டெஸ்ட் பெங்களூருவிலும் தொடங்கி நடக்கும்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அடைந்த காயம் காரணமாக அதன்பின்னர் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர்களில் ஆடாமல், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில்(என்.சி.ஏ) மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெற்றுவந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முழு ஃபிட்னெஸை அடைந்துவிட்டார். எனவே இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவர் ஆடுகிறார்.

என்சிஏ-வில் முழு ஃபிட்னெஸை அடைந்துவிட்டதையடுத்து, இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆடுவதற்காக லக்னோவிற்கு சென்றுவிட்டார் ஜடேஜா. முதல் டி20 போட்டி லக்னோவில் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன் குவாரண்டின், கோவிட் டெஸ்ட் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியிருப்பதால், லக்னோவிற்கு சென்றுவிட்டார் ஜடேஜா. எனவே அவர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஆடுவது உறுதியாகிவிட்டது.

அதேபோல வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட ஃபாஸ்ட் பவுலர் ஜஸ்ப்ரித் பும்ராவும் இலங்கைக்கு எதிராக ஆடுகிறார். அதற்காக அவரும் லக்னோவிற்கு சென்றுவிட்டார்.
 
ஜடேஜா, பும்ரா ஆகியோர் கம்பேக் கொடுக்கும் அதேவேளையில், விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படவுள்ளது. இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்படவுள்ளது. மொஹாலியில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டி கோலிக்கு 100வது சர்வதேச டெஸ்ட் போட்டி. ஒருவேளை அந்த போட்டியிலும் அவர் ஓய்வு எடுத்துக்கொண்டால், பெங்களூருவில் கோலி அவரது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியை ஆடுவார்.

விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிவிட்டதால், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா டெஸ்ட் அணியின் கேப்டன்சியையும் ஏற்பார் என்று தெரிகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Jiohotstar: வெறும் 100 ரூபாய்க்கு டி20 உலகக்கோப்பை பார்த்து ரசிக்கலாம்.. ஜியோ கிரிக்கெட் பிளான்!
பயந்தது போதும்... களத்தில் சந்திப்போம்..! இந்தியாவுடன் விளையாட சம்மதம் சொன்ன பாகிஸ்தான்