BAN vs IND: வங்கதேச சுற்றுப்பயணத்திலிருந்து ஜடேஜா விலகல்.. இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்

By karthikeyan VFirst Published Nov 24, 2022, 4:02 PM IST
Highlights

வங்கதேச சுற்றுப்பயணத்திலிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் யஷ் தயால் ஆகிய இருவரும் விலகியதால், அவர்களுக்கு பதிலாக முறையே ஷபாஸ் அகமது மற்றும் குல்திப் சென் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 

டி20 உலக கோப்பை முடிந்ததும் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் ஆடவில்லை. பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் ஓய்வில் இருக்கிறார். அதனால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆடிய இந்திய அணி, ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் கேப்டன்சியில் ஆடுகிறது. இந்த தொடருக்கு விவிஎஸ் லக்‌ஷ்மண் பயிற்சியாளராக செயல்படுகிறார்.

தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்தது எப்படி? ஏலத்திற்கு முன் தன்னை அணுகிய ஐபிஎல் அணி.! மனம் திறந்த நாராயண் ஜெகதீசன்

நவம்பர் 30ம் தேதியுடன் நியூசிலாந்து சுற்றுப்பயணம் முடியும் நிலையில், அடுத்ததாக டிசம்பர் 4 முதல் வங்கதேச தொடர் தொடங்குகிறது. நியூசிலாந்திலிருந்து வங்கதேசம்  செல்லும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா இணைகிறார். விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் ஆடுகின்றனர். வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 2 தொடர்களிலும் ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றிருந்தனர். அவர் காயத்தால் டி20 உலக கோப்பையில் ஆடாத நிலையில், காயத்திலிருந்து மீண்டு விடுவார் என்பதால் இந்த தொடரில் எடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் காயத்திலிருந்து குணமடையாததால் அவர் வங்கதேச தொடரிலிருந்து விலகியுள்ளார். ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த இளம் ஃபாஸ்ட் பவுலர் யஷ் தயாலும் காயம் காரணமாக விலகினார்.

ஜடேஜா மற்றும் யஷ் தயாலுக்கு பதிலாக முறையே ஸ்பின் ஆல்ரவுண்டர் ஷபாஸ் அகமது மற்றும் குல்திப் சென் ஆகிய இருவரும் அணியில் எடுக்கப்பட்டுள்ளனர்.

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் பட்டிதர், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்திப் சென்.

NZ vs IND: நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணி

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷபாஸ் அகமது, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்.
 

click me!