காயத்திலிருந்து மீண்டு ரஞ்சி தொடரில் ஆடும் ரவீந்திர ஜடேஜா, தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் கூட ஆடவில்லை. காயத்திலிருந்து மீண்டு வந்த ரவீந்திர ஜடேஜா மீது அடுத்தடுத்த தொடர்களில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
காயத்திலிருந்து மீண்ட ரவீந்திர ஜடேஜா, இந்திய அணியில் ஆடுவதற்கு முன்பாக, சர்வதேச கிரிக்கெட்டில் ஆட தயாராகும் விதமாக, ரஞ்சி தொடரில் சௌராஷ்டிரா அணிக்காக் ஆடிவருகிறார். தமிழ்நாடு - சௌராஷ்டிரா இடையேயான போட்டியில் சௌராஷ்டிரா அணியின் கேப்டனாக ஆடிவருகிறார் ஜடேஜா.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணிமுதல் இன்னிங்ஸில் 324 ரன்கள் அடித்தது. பாபா இந்திரஜித் (66), விஜய் சங்கர்(53), ஷாருக்கான்(50) ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்களும் சிறிய பங்களிப்பு செய்ய, முதல் இன்னிங்ஸில் 324 ரன்கள் அடித்தது. ஜடேஜா இந்த இன்னிங்ஸில் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய சௌராஷ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 132 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய தமிழ்நாடு அணி, ஜடேஜாவின் சுழலில் சுருண்டது. முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா, 2வது இன்னிங்ஸில் 7 விக்கெட்டை வீழ்த்தி தமிழ்நாடு அணியை 133 ரன்களுக்கு சுருட்டினார். காயத்திலிருந்து மீண்ட ஜடேஜாவின் அபாரமான பவுலிங் அவருக்கும் இந்திய அணிக்கும் உற்சாகமளிக்கும் விதமாக அமைந்தது.
ஊர்க்கார பிளேயரை அந்தந்த ஊரில் ஆடவைத்தால் டீம் என்ன ஆகுறது..? கேப்டன் ரோஹித் சர்மா காட்டம்
மொத்தமாக 265 ரன்கள் முன்னிலை பெற்றது தமிழ்நாடு அணி. சௌராஷ்டிரா அணி 266 ரன்கள் என்ற இலக்கை விரட்டிவருகிறது.