அவரு புடிச்சா புளியங்கொம்பு தான்.. ODI உலக கோப்பையில் கண்டிப்பா ஆடணும்..! ஆல்ரவுண்டருக்கு இர்ஃபான் பதான் ஆதரவு

By karthikeyan VFirst Published Jan 26, 2023, 8:13 PM IST
Highlights

ஷர்துல் தாகூர் கண்டிப்பாக ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணியில் ஆடவேண்டும் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார்.
 

இந்திய அணி ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. இந்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை இந்தியாவில் நடக்கிறது. 2011ம் ஆண்டுக்கு பின் உலக கோப்பையை ஜெயித்திராத இந்திய அணி, இந்த முறை இந்தியாவில் உலக கோப்பையை தூக்கும் முனைப்பில் உள்ளது.

ஒருநாள் உலக கோப்பைக்காக பிசிசிஐ ஷார்ட்லிஸ்ட் செய்த 20 வீரர்களில் கோர் அணி உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சிய இடங்களுக்கு சில வீரர்கள் சுழற்சி முறையில் களமிறக்கப்படுகின்றனர்.

ஊர்க்கார பிளேயரை அந்தந்த ஊரில் ஆடவைத்தால் டீம் என்ன ஆகுறது..? கேப்டன் ரோஹித் சர்மா காட்டம்

டி20 உலக கோப்பைக்கு பின் இந்திய அணி ஆடிய 3 ஒருநாள் தொடர்களையும் வென்று அசத்தியுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி, அதன்பின்னர் இந்திய மண்ணில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளை ஒயிட்வாஷ் செய்து ஒருநாள் தொடர்களை வென்றது. 

இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், பவுலிங் யூனிட் தான் உறுதி செய்யப்படவேண்டும். பும்ரா அணிக்கு திரும்பிவிட்டால் அவரது இடம் உறுதி. எஞ்சிய இடங்களுக்கு ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், ஷர்துல் தாகூர் என பல வீரர்களுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டரான ஷர்துல் தாகூர் வேகமாக வீசக்கூடிய பவுலர் இல்லை என்றாலும், சூழலுக்கும் வீரருக்கும் ஏற்ப சாமர்த்தியமாக பந்துவீசக்கூடிய பவுலர். எதிரணியின் மேட்ச் வின்னர் மற்றும் பெரிய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவது ஷர்துல் தாகூரின் வழக்கம். மேலும் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைகிறது என்றால், அந்த பார்ட்னர்ஷிப்பை உடைப்பதும், அபாயகரமான வீரரின் விக்கெட்டை வீழ்த்துவதும் ஷர்துல் தாகூராகத்தான் இருப்பார்.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கூட, சதமடித்த டெவான் கான்வே - டேரைல் மிட்செல் இடையே பார்ட்னர்ஷிப் அமைய தொடங்கியபோது டேரைல் மிட்செலை வீழ்த்தி அந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்த ஷர்துல் தாகூர், இந்தியாவிற்கு எதிராக மிகச்சிறந்த ரெக்கார்டை வைத்துள்ள டாம் லேதமை ரன்னே அடிக்கவிடாமல் டக் அவுட்டாக்கி அனுப்பினார். அதன்பின்னர் மற்றொரு முக்கியமான வீரரான க்ளென் ஃபிலிப்ஸையும் ஷர்துல் தாகூர் தான் வீழ்த்தினார்.

அனில் கும்ப்ளேவின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்..!

இந்நிலையில், ஷர்துல் தாகூர் குறித்து பேசியுள்ள முன்னாள் ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான், ஷர்துல் தாகூர் தான் நம்பர் 1 பவுலர். அவர் அருமையாக பந்துவீசுகிறார். நல்ல முயற்சியாளர். தொடர்ச்சியாக விக்கெட்டுக்காக முயன்றுகொண்டே இருக்கிறார். ஷர்துல் 140 கிமீ வேகத்திற்கு மேல் வீசக்கூடிய பவுலரும் இல்லை; ஸ்விங் செய்யக்கூடிய பவுலரும் இல்லை. ஆனால் தொடர்ந்து விக்கெட் வீழ்த்த கடுமையாக முயற்சிப்பார்; விக்கெட்டுகளை வீழ்த்தியும் கொடுக்கிறார். எனவே அவர் கண்டிப்பாக ஒருநாள் உலக கோப்பையில் ஆடவேண்டும் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
 

click me!