அனில் கும்ப்ளேவின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்..!

By karthikeyan VFirst Published Jan 26, 2023, 5:29 PM IST
Highlights

அனில் கும்ப்ளே தனது ஆல்டைம் சிறந்த ஐபிஎல் லெவனை தேர்வு செய்துள்ளார். 
 

உலகின் பணக்கார டி20 லீக் தொடர் ஐபிஎல். ஐபிஎல்லை போன்று பிக்பேஷ் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேச டி20 பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் என உலகம் முழுவதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டாலும், ஐபிஎல்லில் ஆடத்தான் சர்வதேச வீரர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

உலகின் பிரபலமான மற்றும் பணக்கார டி20 லீக் தொடரான ஐபிஎல்லில் இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. ஐபிஎல்லில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், சிஎஸ்கே 4 முறையும் கோப்பையை வென்றுள்ளன. ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடள்ஸ் ஆகிய 3 அணிகளும் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. அறிமுக சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்றது.

பாபர் அசாமுக்கு 2 விருதுகளை வழங்கி கௌரவித்த ஐசிசி..! 2022ன் சிறந்த டெஸ்ட் வீரர் பென் ஸ்டோக்ஸ்

ஐபிஎல் பல அபாரமான திறமைசாலிகளை அடையாளம் காட்டியிருக்கிறது. ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய இந்திய அணியின் மிகப்பெரிய மேட்ச் வின்னர்கள் ஐபிஎல் மூலம் அடையாளம் காணப்பட்டவர்கள் தான். ஐபிஎல்லில் கெய்ல், டிவில்லியர்ஸ், மலிங்கா, ஷேன் வாட்சன் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் அபாரமாக ஆடி அசத்தியிருக்கின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவனான அனில் கும்ப்ளே, ஐபிஎல்லின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் ஆல்டைம் லெவனின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்ல் மற்றும் விராட் கோலியை தேர்வு செய்துள்ள அனில் கும்ப்ளே, 3ம் வரிசை வீரராக சுரேஷ் ரெய்னாவையும், 4ம் வரிசை வீரராக ரோஹித் சர்மாவையும், 5ம் வரிசை வீரராக மிஸ்டர் 360 டிவில்லியர்ஸையும் தேர்வு செய்துள்ளார்.

விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்து அவரையே கேப்டனாகவும் நியமித்துள்ளார் கும்ப்ளே. ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரையும், சுனில் நரைனுடன் மற்றொரு ஸ்பின்னராக யுஸ்வேந்திர சாஹலையும், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா மற்றும் மலிங்கா ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் கும்ப்ளே.

கடின உழைப்பு என்றைக்குமே வீண்போகாது; விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி! ஐசிசி ODI தரவரிசையில் முகமது சிராஜ் முதலிடம்

அனில் கும்ப்ளேவின் ஆல்டைம் ஐபிஎல் லெவன்:

கிறிஸ் கெய்ல், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, ஏபி டிவில்லியர்ஸ், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சுனில் நரைன், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரித் பும்ரா, லசித் மலிங்கா.

click me!