#IPL2021 ஐபிஎல்லில் யுனிவர்ஸ் பாஸ் கெய்லின் சாதனையை சமன் செய்த ஜடேஜா..!

Published : Apr 25, 2021, 06:13 PM IST
#IPL2021 ஐபிஎல்லில் யுனிவர்ஸ் பாஸ் கெய்லின் சாதனையை சமன் செய்த ஜடேஜா..!

சுருக்கம்

ஐபிஎல்லில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்த கெய்லின் சாதனையை ஜடேஜா சமன் செய்துள்ளார்.  

ஐபிஎல் 14வது சீசனில் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில் 191 ரன்களை குவித்தது. 19 ஓவர் முடிவில் 154 ரன்கள் மட்டுமே அடித்திருந்த சிஎஸ்கே அணி, 20 ஓவரில் 191 ரன்களை எட்ட காரணம் ஜடேஜா.

ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி மற்றும் 2 ரன்களுடன் 36 ரன்களை விளாசினார் ஜடேஜா. ஒரு நோ பால் என்பதால் அதற்கும் ஒரு ரன் கிடைத்தது. எனவே கடைசி ஓவரில் மட்டும் சிஎஸ்கே அணிக்கு 37 ரன்கள் கிடைத்தது. 

இதன்மூலம் கிறிஸ் கெய்லின் சாதனையை சமன் செய்துள்ளார் ஜடேஜா. 2011 ஐபிஎல்லில் ஆர்சிபி அணியில் ஆடிய கெய்ல், கொச்சி அணிக்கு எதிரான போட்டியில் பிரசாந்த் பரமேஷ்வரன் என்ற பவுலரின் ஒரு ஓவரில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 36 ரன்களை விளாசினார். அந்த ஓவரில் ஒரு நோ பால் என்பதால் அதற்கும் ஒரு ரன் கிடைக்க, ஒரு ஓவரில் ஆர்சிபி அணிக்கு 37 ரன்கள் கிடைத்தது.

2011 ஐபிஎல்லில் ஒரு ஓவரில் 36 ரன்கள் அடித்த(ஆர்சிபி அணிக்கு 37 ரன்கள்) கெய்லின் சாதனையை ஜடேஜா சமன் செய்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!