இந்தியாவில் ஆடுன சமயத்துல கிரிக்கெட்டையே வெறுத்துட்டேன்..! இங்கிலாந்து வீரர் ஓபன் டாக்

Published : Apr 25, 2021, 05:26 PM IST
இந்தியாவில் ஆடுன சமயத்துல கிரிக்கெட்டையே வெறுத்துட்டேன்..! இங்கிலாந்து வீரர் ஓபன் டாக்

சுருக்கம்

இந்திய சுற்றுப்பயணத்தின்போது, கிரிக்கெட்டையே வெறுத்ததாக இங்கிலாந்து ஸ்பின்னர் டோமினிக் பெஸ் தெரிவித்துள்ளார்.  

இங்கிலாந்து அணி ஐபிஎல்லுக்கு முன்பாக இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணத்தில் ஆடியது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆடியதால், வீரர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தனர்.

2 மாதம் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பது மிகக்கடினம். அந்தவகையில், இந்தியாவிற்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்துவீசிய டோமினிக் பெஸ், கொரோனா வளையத்தில் இருந்த காலத்தில் கிரிக்கெட்டையே வெறுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய டோமினிக் பெஸ், இந்திய சுற்றுப்பயணத்துக்கு பிறகு ஒரு பிரேக் எடுத்துக்கொண்டேன். கொரோனா வளையத்தில் இருந்தது கடினமான காலம். அந்த அழுத்தம் நிறைந்த நெருக்கடியான நேரத்தில் கிரிக்கெட்டையே வெறுக்க தொடங்கிவிட்டேன்.  

நமக்கு சாதகமாக அனைத்தும் சென்றால், கொரோனா வளையம் கடினமாக இருக்காது. ஆனால் நமக்கு சாதகமாக இல்லாத நிலையில், மிகக்கடினமாக இருக்கும். அப்படித்தான் தனக்கு இருந்ததாக டோமினிக் பெஸ் தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
இந்தியாவுக்காக மீண்டும் களம் இறங்கும் ரோ-கோ எப்போது தெரியுமா? கோலி, ரோஹித்தின் அடுத்த ஒருநாள் போட்டி