நீண்ட இடைவெளிக்கு பிறகு சிஎஸ்கேவிற்காக ஆடும் வெளிநாட்டு வீரர்! ஆர்சிபியில் 2 மாற்றங்கள்;தோனியின் அதிரடி முடிவு

Published : Apr 25, 2021, 03:20 PM IST
நீண்ட இடைவெளிக்கு பிறகு சிஎஸ்கேவிற்காக ஆடும் வெளிநாட்டு வீரர்! ஆர்சிபியில் 2 மாற்றங்கள்;தோனியின் அதிரடி முடிவு

சுருக்கம்

ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.  

ஐபிஎல் 14வது சீசனின் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடேவில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி, பிட்ச் போகப்போக ஸ்லோவாகும் என்பதால் முதலில் பேட்டிங் செய்வதாக தெரிவித்தார்.

இரு அணிகளிலுமே தலா 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிஎஸ்கே அணியில் மொயின் அலிக்கு பதிலாக, நீண்ட இடைவெளிக்கு பிறகு இம்ரான் தாஹிர் களமிறங்குகிறார். இங்கிடிக்கு பதிலாக ஆல்ரவுண்டர் பிராவோ வந்துள்ளார்.

சிஎஸ்கே அணி: 

டுப்ளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), சாம் கரன், பிராவோ, ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்.

ஆர்சிபி அணியில் கேன் ரிச்சர்ட்ஸனுக்கு பதிலாக டேனியல் கிறிஸ்டியனும், ஸ்பின்னர் ஷபாஸ் அகமதுவுக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் நவ்தீப் சைனியும் களமிறங்கியுள்ளனர்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டியன், கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், நவ்தீப் சைனி.
 

PREV
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: ஹர்சித் ராணா நீக்கம்.. தமிழக வீரருக்கும் இடமில்லை.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
இந்தியாவுக்காக மீண்டும் களம் இறங்கும் ரோ-கோ எப்போது தெரியுமா? கோலி, ரோஹித்தின் அடுத்த ஒருநாள் போட்டி