#IPL2021 முதல் 4 போட்டிகளில் அவரு ஆடாதது ஏன்..? பஞ்சாப் கிங்ஸ் ஹெட் கோச் கும்ப்ளே விளக்கம்

By karthikeyan VFirst Published Apr 24, 2021, 10:48 PM IST
Highlights

ஐபிஎல் 14வது சீசனின் முதல் சில போட்டிகளில் ரவி பிஷ்னோய் ஆடாதது ஏன் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே விளக்கமளித்துள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசனின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி, அதன்பின்னர் 3 போட்டிகளில் தொடர் தோல்விகளை தழுவிய நிலையில், மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் எதிரான வெற்றி பெற்றது.

கடந்த சீசனில் 14 போட்டிகளில் ஆடிய பஞ்சாப் அணியின் ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய், இந்த சீசனின் முதல் 4 போட்டிகளில் ஆடவில்லை. கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் முதன்மை ஸ்பின்னராக இருந்த பிஷ்னோய், இந்த சீசனில் 4 போட்டிகளிலுமே ஆடாதது அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் பிஷ்னோய் களமிறக்கப்பட்டார். அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பிஷ்னோய், வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்ட மும்பை அணியை 131 ரன்களுக்கு சுருட்ட உதவினார்.

தொடர் தோல்விகளை சந்தித்த பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு திருப்பியதில் பிஷ்னோயின் பங்களிப்பு முக்கியமானது. இந்நிலையில், முதல் 4 போட்டிகளில் பிஷ்னோயை ஆடவைக்காதது ஏன் என பஞ்சாப் அணியின் ஹெட் கோச் அனில் கும்ப்ளே தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அனில் கும்ப்ளே, கடந்த சீசனில் பிஷ்னோய் சிறப்பாக பந்துவீசினார். ஆனால் இந்த சீசனில் ஆட வந்தபோது, கடந்த சீசனில் பார்த்த பிஷ்னோய் இல்லை என்பது தெரிந்தது. எனவே அவரது ரன் அப்பில் சில மாற்றங்களை செய்தேன். அந்த புதிய ரன் அப்பில் பயிற்சி செய்தார் பிஷ்னோய். அதனால் தான் அவர் முதல் 4 போட்டிகளில் ஆடவில்லை என்று கும்ப்ளே விளக்கமளித்தார்.
 

click me!