#CSKvsRCB நீங்க மட்டும் இல்ல நாங்களும் கெத்துதான்! சிஎஸ்கேவை போல மாறிய ஆர்சிபி; இருஅணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Apr 25, 2021, 2:45 PM IST
Highlights

சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 14வது சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ஆர்சிபி அணி, இந்த சீசனை சிறப்பாக தொடங்கியுள்ளது. முதல் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது ஆர்சிபி. 

கடந்த சீசன்களில் ஆடும் லெவனை ஆர்சிபி அணி மாற்றிக்கொண்டேயிருக்கும். ஆனால் இந்த சீசனில் பேட்டிங் ஆர்டர் மற்றும் பவுலிங் ஆகிய அனைத்துமே நன்றாக செட் ஆகிவிட்டது. கடந்த சீசன்களில் ஆர்சிபி அணியின் பலவீனமாக இருந்த டெத் பவுலிங், இந்த சீசனில் வலுவடைந்துள்ளது. சிராஜ், ஹர்ஷல் படேல், கைல் ஜாமிசன், கேன் ரிச்சர்ட்ஸன் ஆகியோர் அபாரமாக வீசுகின்றனர்.

எனவே இன்று சிஎஸ்கேவை எதிர்கொள்ளும் ஆர்சிபி அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. பொதுவாக சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான், ஜெயித்தாலும் தோற்றாலும் ஆடும் லெவன் காம்பினேஷனை மாற்றாமல், வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து அதே அணியுடன் ஆடும். ஆனால் இந்த சீசனில் ஆர்சிபி அணி அந்த மாதிரியான அணியாக மாறியுள்ளது.

மும்பை வான்கடேவில் நடக்கும் இன்றைய போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதும் நிலையில், இரு அணிகளின் ஆடும் லெவன் காம்பினேஷனிலும் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி(கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஷபாஸ் அகமது, க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், கைல் ஜாமிசன், கேன் ரிச்சர்ட்ஸன், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

சிஎஸ்கே அணி:

டுப்ளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, ரெய்னா, ராயுடு, தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), சாம் கரன், ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், லுங்கி இங்கிடி.
 

click me!