இந்திய அணியின் ட்ரீம் 11 புதிய ஜெர்சியுடன் போட்டோஷூட் நடத்திய வீடியோவின் போது எனக்கு அந்த போட்டோ வேணாம், இது ஓகே என்று சொன்ன ரவீந்திர ஜடேஜாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்கியது. அதில் அடிடாஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிக்கு ஸ்பான்ஸர் செய்தது. இதையடுத்து, இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக இருந்த பைஜூஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் வரும் நவம்பர் மாதம் வரையில் இருந்தது.
ட்ரீம் 11 ஜெர்சியுடன் டாப் பேட்ஸ்மேன்கள்: வைரலாகும் போட்டோஷூட் புகைப்படங்கள்!
ஆனால், வருமானம் பாதிப்பு காரணமாக ஒப்பந்தத்தை மார்ச் மாதத்துடன் முடித்துக் கொண்டது. இதையடுத்து கடந்த ஜூன் 7 ஆம் தேதி நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஜெர்சியில் ஸ்பான்ஸர் லோகோ இல்லாமல் களமிறங்கியது. மாறாக அணியின் புதிய கிட் ஸ்பான்ஸராக அடிடாஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.
WI vs IND 1st Test: கேஎஸ் பரத், முகேஷ் குமாருக்கு வாய்ப்பில்லை: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்!
இந்த ஒப்பந்தம் ஜூன் மாதம் முதல் தொடங்கியது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா அடிடாஸ் நிறுவனத்தின் புதிய ஜெர்சியுடன் களமிறங்கியது. இந்த நிலையில் தான் பைஜூஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மார்ச் மாதம் முடிந்த நிலையில், ஸ்பான்சருக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதனை ஃபேண்டஸி கேமிங் ஆப் செயலி நிறுவனமான டிரீம் லெவன் நிறுவனம் கைப்பற்றியது. வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் ட்ரீம் 11 நிறுவனம் இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்ஸராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
TNPL 2023 Final: டிஎன்பிஎல் ஃபைனல்: லைகா கோவை கிங்ஸ் பேட்டிங்; என்ன செய்யப் போகிறது நெல்லை?
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது டொமினிகாவில் நடந்து வௌர்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இந்த டெஸ்ட் தொடர் மூலமாக தொடங்குகிறது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 பிளேயர்ஸ் பட்டியலில் யாரெல்லாம் இருக்கிறாங்க?
தற்போது தொடங்கியுள்ள டெஸ்ட் போட்டியில் இந்தியா ட்ரீம் 11 ஜெர்சியுடன் களமிறங்கியுள்ளது. இதையடுத்து இந்திய வீரர்கள் ஒவ்வொருவராக ட்ரீம் 11 ஜெர்சியுடன் போட்டோஷூட் செய்த புகைப்படமும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் எனக்கு அந்த போட்டோ வேணாம், இது ஓகே என்று சொல்லி அடம்பிக்கும் ரவீந்திர ஜடேஜாவின் வீடியோ வைரலாகி வருகிறது.