பாதுகாப்பா இருங்க.. ஆனால் ப்ளீஸ் இதையும் செய்யுங்க..! ஜடேஜாவின் உருக்கமான வேண்டுகோள்

By karthikeyan VFirst Published May 7, 2021, 6:13 PM IST
Highlights

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொண்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திய ரவீந்திர ஜடேஜா, அதேவேளையில் கஷ்டப்படும் சுற்றத்தாருக்கு உதவுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். ஐபிஎல்லில் ஆடிய வீரர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, ஐபிஎல் 14வது சீசன் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

பாட் கம்மின்ஸ், பிரெட் லீ ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உட்பட இந்திய வீரர்கள் சிலரும் கொரோனாவை எதிர்கொள்ள நிதியுதவி செய்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி - பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஜோடி, கொரோனாவிற்கு நிதியுதவி செய்ய நிதி திரட்டும் பணியில் ஈடுபட்ட நிலையில், இதுவரை திரட்டிய ரூ.2 கோடியை வழங்கியுள்ளனர். மொத்தமாக ரூ.7 கோடி திரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.

மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி, தனிநபர் இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகின்றனர்.

அந்தவகையில், சிஎஸ்கே டுவிட்டரில் வெளியிட்ட வீடியோவில் பேசிய ரவீந்திர ஜடேஜா, அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். குடும்பத்தினரையும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளுங்கள். கொரோனாவிற்கு எதிராக நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும். எனவே மாஸ்க் அணியுங்கள், கிருமிநாசினி பயன்படுத்துங்கள், கைகளை அடிக்கடி கழுவுங்கள். பாதுகாப்பாக இருக்கும் அதேவேளையில், உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஏதேனும் உதவி தேவை என்றால், அதை கேட்டு உங்களால் முடிந்தவரை நிறைவேற்றுங்கள். ஏனெனில் இந்த இக்கட்டான சூழலில் மற்றவர்களிடம் உதவி கேட்க சிலர் தயங்குவார்கள். எனவே உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு உதவுங்கள் என்று ஜடேஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

click me!