ஹைதராபாத்தில் நேற்று நடந்த பிசிசிஐ விருது வழங்கும் விழாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு திலீப் சர்தேசாய் விருது வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, கூச் பெஹார் டிராபி, அண்டர்19 உலகக் கோப்பை, சர்வதேச கிரிக்கெட் என்று அனைத்திலும் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதன் பிறகு இந்த 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு 2020 முதல் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ விருது வழங்கியது.
இதில், 2019 – 20 ஆம் ஆண்டுகளில் சிறந்த அறிமுக வீரருக்கான விருது மாயங்க் அகர்வாலுக்கு வழங்கப்பட்டது.
2020 – 21: சிறந்த சர்வதேச அறிமுக வீரர் – அக்ஷர் படேல் (டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் 5 விக்கெட்)
2021 – 22: சிறந்த சர்வதேச அறிமுக வீரர் – ஷ்ரேயாஸ் ஐயர் (105 டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம்)
2022 – 23: சிறந்த சர்வதேச அறிமுக வீரர் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (171 டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம்)
ரவி சாஸ்திரி மற்றும் ஃபரூக் இன்ஜினியருக்குக்கு சிகே நாயுடுவின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதே போன்று மகளிருக்கான சிறந்த சர்வதேச வீராங்கனைக்கான 2019 -20 மற்றும் 2022 – 23 ஆண்டுக்கான விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது. ஸ்மிருதி மந்தனா 2020 - 21 மற்றும் 2௦21 - 22க்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட்டருக்கான விருது வென்றார்.
இந்த நிலையில் தான், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான திலிப் சர்தேசாய் விருது வழங்கப்பட்டது. இதில், இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும், அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும் திலிப் சர்தேசாய் விருது வழங்கப்பட்டது. இதே போன்று 2020 -21 ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச கிரிக்கெட்டருக்கான பாலி உம்ரிகர் விருது வழங்கப்பட்டது.